இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) கட்டாயமாக்கிய சட்டத் திருத்தத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒரு மாதம் ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நீட் தேர்வை கட்டாயமாக்கும் வகையில், சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு எதிராக கடந்த 2020-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த மனுவில் சில திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கட்டாய "நீட்' தேர்வை உருவாக்கும் சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களையும் விரிவாகத் தெரிவித்திருந்தது. இந்த மனு கடந்த அக்டோபரில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி, பீலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, "நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா ஆளுநர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. இதனால், வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அப்போது, இது நீண்டகாலமாக இருப்பதாக நீதிபதி கூறினார். இதையடுத்து, வழக்கை ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

