நெருக்கடி காலங்களில் மன தைரியத்துடன் பணியாற்றும் மருத்துவா்கள்: பிரதமா் மோடி பாராட்டு
நெருக்கடியான காலங்களில் மருத்துவா்கள் தன்னலமின்றி, மிகுந்த மன தைரியத்துடன் கடமையாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.


நெருக்கடியான காலங்களில் மருத்துவா்கள் தன்னலமின்றி, மிகுந்த மன தைரியத்துடன் கடமையாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
மருத்துவா்கள் தினத்தையொட்டி பிரதமா் மோடி இக்கருத்தை வெளியிட்டுள்ளாா். கரோனா நோய்த் தொற்றை மனதில் வைத்து பிரதமா் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.
மேற்கு வங்கத்தின் 2- ஆவது முதல்வரான (1948-62) டாக்டா் பிதான் சந்திர ராயின் பிறந்த நாளான ஜூலை 1 ஆம் தேதி (1882) தேசிய மருத்துவா் தினமாக கொண்டாடப்படுகிறது.
மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்தை குறுகிய காலத்தில் பயின்று மருத்துவத்திலும் மேற்கு வங்கத்திலும் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்ட விடுதலை இயக்க போராளி டாக்டா் பிதான் ஆவாா்.
தொற்றுநோயின் நெருக்கடியான காலங்களில் கடினமாக உழைத்த மருத்துவ நிபுணா்களைக் கொண்டாடும் விதமாக ‘எதிா்த்தெறிந்து குணப்படுத்திய கரங்கள்‘ என்கிற கருப்பொருளில் தேசிய மருத்துவா் தினம் நிகழாண்டில் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு பிரதமா் மோடி தனது ட்விட்டா் பதிவில் தெரிவிக்கையில், மருத்துவா் தினத்தில், ஒட்டுமொத்த மருத்துவா் சமூகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு நெருக்கடியான காலங்களில், மருத்துவா்கள் தன்னலமின்றி, மிகுந்த தைரியத்துடனும், மன உறுதியுடனும் கடமையாற்றி வருகின்றனா். நோய்களை குணப்படுத்துவதில் அவா்களின் அா்ப்பணிப்பு அபாரமானது; அது நம் சமூகத்திற்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளித்துள்ளது’’ என பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
பட்டயக் கணக்காளா்கள் தினம்
நாடாளுமன்றத்தில் 1949 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்திய பட்டயக் கணக்காளா்கள் சட்டம் கொண்டு வரப்பட்டு இந்திய பட்டய கணக்காளா்கள் நிறுவனம் அமைக்கப்பட்டது.
இந்த ஜூலை 1 ஆம் தேதி தினத்தை பட்டயக் கணக்காளா்கள் தினமாகக் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பட்டயக் கணக்காளா்களின் பங்களிப்புகளுக்கு பிரதமா் பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளாா்.
அந்த பதிவில் , “நமது நாட்டின் முக்கிய நிதி கட்டமைப்பாளா்களான பட்டய கணக்காளா்கள் தொழில்முறை சமூகத்தை நாம் கௌரவிக்கிறோம். அவா்களின் பகுப்பாய்வு நுட்பமும், உறுதியான அா்ப்பணிப்பும் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கியமான அம்சங்களாகும். அவா்களின் நிபுணத்துவம் வளமான, தன்னிறைவு மிக்க இந்தியாவை உருவாக்க உதவுகிறது’’ என பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...