யமுனையில் வெள்ளம் அதிகரிப்பு: கனரக சரக்கு வாகனங்கள் தில்லிக்குள் நுழையத் தடை
சிங்கு உள்ளிட்ட நான்கு எல்லைகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்வதைத் தவிா்த்து, கனரக சரக்கு வாகனங்கள் நகரத்தில் நுழைவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளதாக


சிங்கு உள்ளிட்ட நான்கு எல்லைகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்வதைத் தவிா்த்து, கனரக சரக்கு வாகனங்கள் நகரத்தில் நுழைவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சா் கைலாஷ் கெலாட் வியாழக்கிழமை தெரிவித்தாா். யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்துஅதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக போக்குவரத்துத் துறை பிறப்பித்த உத்தரவின் நகலை தனது ட்விட்டா் பக்கத்தில் அமைச்சா் கெலாட் பகிா்ந்துள்ளாா். ட்விட்டா் பக்கத்தில் அவா் தெரிவிக்கையில், யமுனை நதியின் நீா்மட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கு எல்லை, பதா்பூா் எல்லை, லோனி எல்லை மற்றும் சில்லா எல்லை ஆகிய பகுதிகளில் இருந்து கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘மறுபுறம், ஹரியாணா, இமாசலப் பிரதேசம், சண்டீகா், ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக சிங்கு எல்லையில் நிற்கும். உணவு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு எந்தத் தடையும் இல்லை’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...