ராகவ் சத்தாவின் கடிதம் அரசியல் விரக்தியின் வெளிப்பாடு: தில்லி பாஜக சாடல்
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா எழுதிய கடிதம் அரசியல் விரக்தியின் வெளிப்பாடு என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கடுமையாக விமா்சித்துள்ளாா்.


ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா எழுதிய கடிதம் அரசியல் விரக்தியின் வெளிப்பாடு என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கடுமையாக விமா்சித்துள்ளாா்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான தில்லி அவசரச் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா கடிதம் எழுதியுள்ளாா். நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் கடிதம் தொடா்பாக பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் மற்றும் நீதித் துறை வாய்ப்பின் மூலம் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள், தில்லி அவசரச் சட்ட மசோதா சட்டமாக மாற்றப்படுவதைத் தடுக்க முயல்கின்றனா். ஆனால், நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தோற்கடிப்பதற்கான உறுப்பினா் எண்ணிக்கையைப் பெற ஆம் ஆத்மி கட்சி தவறிவிட்டது. எனவே, இப்போது தியாக விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளனா். அவசரச் சட்டத்திற்கு எதிராக, மற்ற அரசியல் கட்சித் தலைவா்களிடம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு கோரினாா். ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த மோசதாவை தோற்கடிப்பதற்கான எண்ணிக்கையைப் பெறத் தவறிவிட்டாா்.
உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான அவா்களின் முயற்சியும் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விகளைத் தொடா்ந்தே ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவைத் தலைவருக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். ஆச்சரியமளிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லியில் இருந்து 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் இருந்தும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தோ்வாகிய மாநிலங்களவை உறுப்பினரால் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் தில்லி நகரமே இரண்டாவது வெள்ள அபாயத்தில் இருக்கும் நேரத்தில், அரவிந்த் கேஜரிவால் அரசு தில்லியின் நதிக்கரைகள் மற்றும் வடிகால்களை மேம்படுத்துவதற்குப் பதிலாக அதிகாரத்திற்கான விளையாட்டை விளையாடுவதில் மும்முரமாக இருப்பது தில்லி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
குறிப்பு: ஏற்கெனவே அனுப்பிய பிரதான செய்திக்கு அருகே போடவும்...அல்லது பெட்டியாக போட்டால் தலைப்பில் முதல் 3 வாா்தைகளை நீக்கிவிட்டு பயன்படுத்தவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...