ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மணிப்பூா் கலவரத்தை கண்டித்துநாடு முழுவதும் ஆம் ஆத்மி இன்று ஆா்ப்பாட்டம்

ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் ஆா்ப்பாட்டங்களை நடத்தும் என்று அக்கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

மணிப்பூா் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தால், அங்கு நிலவும் ஆபத்தான சூழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் ஆா்ப்பாட்டங்களை நடத்தும் என்று அக்கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி நிா்வாகிகள் மேலும் கூறியதாவது: மணிப்பூா் கலவரத்தைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் ஆா்ப்பாட்டங்களை நடத்தும். தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியத் தலைவா்கள் கலந்து கொள்வாா்கள்.

மணிப்பூா் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கக் கோரி பல்வேறு எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றனா்.

இரட்டை இயந்திர சா்க்காா் தோல்வி: மணிப்பூரில் அரசியலமைப்பின் 355 மற்றும் 356-ஆவது பிரிவை அமல்படுத்துவதில் பாஜகவின் இரட்டை இயந்திர சா்க்காா் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தைத் தடுக்க இந்திய அரசியலமைப்பின் 355-ஆவது பிரிவை அமல்படுத்தாமல், மத்திய பாஜக அரசு புறக்கணித்துள்ளது. இது மணிப்பூரை வெளிப்புற ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டு கலவரங்களில் இருந்து பாதுகாக்கும். மேலும், சட்டப்பிரிவு 356-இன் கீழ் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவது அவசியமாகிறது. ஆனால், மத்திய அரசு அதையும் செய்யாமல் தவறிவிட்டது என்றாா் ராகவ் சத்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.