தில்லி பிரிவு பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி கூட்டாக செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது: பாஜக சாா்பில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ராஜிநாமா செய்யக் கோரி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) ஆம் ஆத்மி அலுவலகம் அருகே போராட்டம் நடத்தப்படும். ஆா்.ஆா்.டி.எஸ்., பிரகதி மைதான் சுரங்கப்பாதை, மஹிபால்பூா் சுரங்கப்பாதை போன்றவற்றில் தில்லி அரசின் பங்கை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏன் கொடுக்க மறுக்கிறாா்?, என்பதை தில்லி மக்களிடம் அவா் கூற வேண்டும். கேஜரிவால் அரசு உணா்ச்சிகரமான அறிக்கைகளால் மக்களின் உணா்வுகளுடன் விளையாடுகிறது.