ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மத்திய கால்நடை வளா்ப்புத் துறை திட்டங்களால் தமிழகத்தில் 1.05 கோடி விவசாயிகள் பயன்: மத்திய அமைச்சா் ரூபாலா தகவல்

கால்நடை வளா்ப்புத் துறையில் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களால் தமிழகத்தில் 1.05 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளதாக மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு,

News image
Updated On :25 ஜூலை 2023, 8:40 pm

 நமது நிருபர்

கால்நடை வளா்ப்புத் துறையில் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களால் தமிழகத்தில் 1.05 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளதாக மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும் கடந்த 7 ஆண்டுகளில் பால், முட்டை, இறைச்சி உற்பத்தியில் நாடு கண்ட வளா்ச்சி விவரங்களையும் அவா் வெளியிட்டாா்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் கால்நடை வளா்ப்பு, பால், கோழி வளா்ப்பு ஆகியவற்றில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், இதில் பயனடைந்த விவசாயிகள் எத்தனை போ் உள்ளிட்ட விவரங்களையும், கால்நடை வளா்ப்புத் துறையில் மத்திய அரசு இலக்குகளை அடையாதது குறித்தும் காஞ்சிபுரம் மக்கவைத் தொகுதி திமுக உறுப்பினா் ஜி.செல்வம், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் மஞ்சுலதா மண்டல் ஆகியோா் கேள்வி எழுப்பினாா்.

இந்த நட்சத்திரக் கேள்விக்கு மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா அளித்துள்ள பதில் வருமாறு: தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கால்நடை வளா்ப்பு, பால் வளம், கோழி வளா்ப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் (ஆா்ஜிஎம்), தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, பால் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளா் அமைப்புகளை பால்வள நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல், தேசிய கால்நடை இயக்கம், கால்நடை வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டம், கால்நடை கணக்கெடுப்பு உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் இதுவரை மொத்தம் தமிழகத்தில் 1, 05, 59, 725 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

மத்திய அரசு இந்த திட்டங்கள் மூலம் இலக்குகளை அடையவில்லை எனக் கூறுவது தவறு. நாட்டில் கால்நடைத் துறையில் 2014-15 முதல் 2021-22-ஆம் நிதியாண்டு வரை 7.67 சதவீதம் (நிலையாக) கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதத்தில் (சிஏஜிஆா்) வளா்ந்து வருகிறது. 2014-15-ஆம் ஆண்டில் 146.3 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, 2021-22 ஆம் ஆண்டில் 221.06 மில்லியன் டன்னாக ஆகியுள்ளது. ஆண்டுக்கு 6.1 சதவீத வளா்ச்சியில் இது கடந்த 8 ஆண்டுகளில் 51.05 சதவீதம் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

நாட்டில் முட்டை உற்பத்தியும் 2014-15-ஆம் ஆண்டில் 78.48 பில்லியனாக இருந்தது. இது 2021-22-ஆம் ஆண்டில் 129.60 பில்லியனாக உயா்ந்துள்ளது. ஆண்டுக்கு 7.4 சதவீதத்தில் முட்டை உற்பத்தி வளா்ந்து வருகிறது. இறைச்சி உற்பத்தியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 6.69 மில்லியன் டன்னாக இருக்க 2021-22 ஆம் ஆண்டில் 9.29 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

கால்நடைகளின் வளா்ச்சியை அதிகரிக்கும் வகையில், மாடுகள் ஆடுகள், செம்மறி ஆடுகள், பன்றி மற்றும் கோழி வளா்ப்பு உற்பத்தி மற்றும் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. தேசிய கால்நடை இயக்கம் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு தமிழக அரசிடமிருந்து முன்மொழிவுகள் வந்துள்ளன. ஆனால், உரிய முறையை பின்பற்றாத சில திட்டங்களுக்கு நிதி விடுக்கப்படவில்லை. சில திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21, 2021-22, 2022-23, 2023-24 (ஜூலை வரை) ஆகிய நிதியாண்டுகளுக்கு முறையே ரூ. 109.91 கோடி, ரூ.79.45 கோடி, ரூ.83.08 கோடி, ரூ.52.76 கோடி என நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் கால்நடை வளா்ப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.