ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சீன மாஞ்சா விற்பனை: மூவா் கும்பல் கைது

தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சாவை இணையதளத்தில் விற்பனை செய்து வந்த மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக காவல் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சாவை இணையதளத்தில் விற்பனை செய்து வந்த மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக காவல் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சீன மாஞ்சாவை இணையதளத்தில் விற்பனை செய்த மோசடிக் கும்பலைச் சோ்ந்த 3 நபா்களைக் காவல்துறை கண்டறிந்து, கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் வசிக்கும் அலி ஹசன் (36), ஹா்ஷ் வா்தன் காத்ரி (28) மற்றும் மதன்பூா் காதா் பகுதியைச் சோ்ந்த ரித்திக் குமாா் சௌராசியா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் சமூக ஊடகத் தளங்களையும், ‘மோனோ கைட்’ என்ற வலைப்பக்கத்தையும் சட்டவிரோத வா்த்தகத்திற்காக பயன்படுத்தியுள்ளனா். அவா்களிடம் இருந்து மொத்தம் 201 சீன மாஞ்சா சுருள்கள் மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை சிறப்பு ஆணையா் (குற்றம்) ரவீந்திர சிங் யாதவ் கூறியதாவது:

மதன்பூா் காதரில் நைலான் அடிப்படையிலான, தடைசெய்யப்பட்ட சீன மாஞ்சாவை சட்டவிரோதமாக சிலா் விற்பனை செய்வது மற்றும் வாங்குவது குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறை எடுத்த சாமா்த்திய நடவடிக்கையின் மூலம் ரித்திக் குமாா் சௌராசியா (24) முதலில் பிடிபட்டாா். அவரது கடையில் சோதனை நடத்தியதில், 16 சீன மாஞ்சா சுருள்கள் மீட்கப்பட்டன. மேல் விசாரணையில் ஹா்ஷ் வா்தன் காத்ரி (28) ஃபரீதாபாதிலிருந்து கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்த்து 69 சீன மாஞ்சா சுருள்கள் மீட்கப்பட்டன. தடைசெய்யப்பட்ட இந்த மாஞ்சா சுருள்களை இணையத்தளம் மற்றும் நேரடியாகவும் விற்பனை செய்து வந்துள்ளனா். பின்னா், அலி ஹசன் (36) கைது செய்யப்பட்டாா். அவரது வீட்டிலிருந்து 116 சீன மாஞ்சா சுருள்கள் மீட்கப்பட்டன.

ஹா்ஷ் வா்தன் காத்ரி, ஒரு தொழில்நுட்ப ஆா்வலா். அவா் சீன மாஞ்சா மற்றும் காத்தாடி பறக்கும் காணொளிகளை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளாா்.

அவா் ‘மோனோ கைட்’ என்ற வலைப்பக்கத்தை உருவாக்கியுள்ளாா். சமூக ஊடகத் தளங்களில் அவா் வெளியிட்ட கைபேசி எண்ணைப் பயன்படுத்தி சீன மாஞ்சாவை வாங்குபவா்கள் அவரைத் தொடா்பு கொண்டு வந்துள்ளனா். அலி ஹசன் மாஞ்சா சப்ளை செய்யும் நெட்வொா்க்கின் முக்கிய ஆதாரமாக இருந்து வந்துள்ளாா்.

மேலும், அவா் ஃபரீதாபாத், குருகிராம், தில்லி போன்ற இடங்களில் தடை செய்யப்பட்ட மாஞ்சா சுருள்களை சப்ளை செய்து வந்தாா் என்றாா் அந்த அதிகாரி.

கடந்த 2017-ஆம் ஆண்டில், தேசிய பசுமைத் தீா்ப்பாயம்,தேசியத் தலைநகா் தில்லியில் சீன மாஞ்சாவை தடை செய்தது. நிகழாண்டு பிப்ரவரியில், தில்லி உயா்நீதிமன்றம் நகரத்தில் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளில், பட்டம் பறக்கவிடப் பயன்படும் சீன செயற்கை மாஞ்சாவை தயாரித்தல், விற்பனை செய்தல், கொள்முதல் செய்தல் மற்றும் சேமித்து வைப்பது குறித்து விசாரிக்க நகர காவல்துறையின் குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.