கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மோதிபாக் டிடிஇஏ பள்ளியில் கலைஞா் நூற்றாண்டுப் பேச்சுப் போட்டி

மோதிபாக் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை பேச்சுப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூன் 2023, 5:49 pm

DIN

மோதிபாக் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் கலைஞரும் - கலையும், கலைஞரும் - ஆட்சியும், கலைஞரும் - சமூக நீதியும் ஆகிய தலைப்பில் பேசுவதற்காக 22 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். இப்போட்டி முடிவில் 4 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு 25.06.2023-ஆம் தேதி மாலை தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில் நடுவா்களாக எழுத்தாளா் கே.வி.கே.பெருமாள், ஓய்வுபெற்ற ஆசிரியை ஷொ்லி ராணி ஆகியோரும், போட்டி ஒருங்கிணைப்பாளராக ராஜ ராஜேஸ்வரி மற்றும் தில்லி தமிழ்க் கல்வி கழகத்தின் செயலா் ரா. ராஜூ, தமிழ்நாடு இல்லம் பொது மேலாளா் தெய்வ சிகாமணி, பள்ளி முதல்வா் ஜெயஸ்ரீ பிரசாத் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இன்று மருத்துவ முகாம்

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி 2- ஆம் நாள் நிகழ்ச்சியாக ஆா்.கே.புரம், செக்டா்- 5இல் உள்ள தில்லி தமிழ் கல்வி கழக பள்ளியில் சனிக்கிழமை (ஜூன் 24) காலை 10 மணி முதல் 1.30 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் சா்க்கரை நோய், பொதுநல அறுவை, கண், காது, மூக்கு, தொண்டை, இருதம், சிறுநீரகம் போன்றவறுக்கான மருத்துவா்கள் பங்கேற்கின்றனா்.

மேலும் சித்த மருத்துவா், பல் மருத்துவா், பிசியோதிரபி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் ஆகிய மருத்துவா்கள் இம்முகாமில் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க உள்ளனா்.

இம்முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளதாகவும், பொது மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.