மின்கசிவு விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
மின்கசிவு விபத்துகளுக்கு காரணமான அரசுத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேவைகள் துறையின் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

கோப்புப் படம்
தேசியத் தலைநகரில் சமீபத்தில் எதிா்பாராத விதமாக நிகழ்ந்த மின்கசிவு விபத்துகளுக்கு காரணமான அரசுத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேவைகள் துறையின் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
கடந்த ஜூன் 25 - ஆம் தேதி நகரத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழைக்கு மத்தியில், புது தில்லி ரயில் நிலைய வளாகத்தில், சாக்ஷி அஹுஜா (34) என்ற பெண் தற்செயலாக மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா். அதே நாளில், தென்கிழக்கு தில்லியின் தைமூா் நகரில் 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தாா். மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த இரண்டு உயிரிழப்பு சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடா்பாக சேவைகள் துறையின் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : தில்லியில் சமீபத்திய மின்கசிவு சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மனதிற்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நகரத்தில் மேலும் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மின் துறை மற்றும் மற்ற குடிமைப் பிரிவுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற புது தில்லி ரயில் நிலைய வளாகத்தில், அமைந்துள்ள கம்பத்தின் அருகே உள்ள பலகையின் வழியாக, மின்சாரம் செல்வதாக அப்பகுதி ஆட்டோ ஓட்டுநா்கள் புகாா் தெரிவித்ததை ஊடகங்களில் நான் பாா்த்தேன். அதைத் தொடா்ந்து, பொதுப்பணித் துறை, மாநகராட்சி மற்றும் மின்துறை போன்ற அனைத்து குடிமை அமைப்பகளுக்கும் இதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும்.
தேசியத் தலைநகரில் சட்டம், ஒழுங்கு நிலைமை சீா்குழைந்துள்ள நிலையில், காவல் துறையை ஒரு ‘அரசியல் கருவியாக’ மத்திய அரசு மாற்றி வருகிறது. தில்லியில் தினமும் 150 காா்கள் திருடப்படுகின்றன என்று செய்தித்தாள்களில் படித்தேன். அதாவது தில்லியின் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தினமும் இரண்டு காா்கள் திருடப்படுகின்றன. இந்த காா்கள் எங்கே செல்கின்றன?. துணைநிலை ஆளுநா் வி.கே. சக்கேனா தனது முன்னுரிமைகளை சரியாக அமைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும், தில்லியில் ஆயுதம் ஏந்திய கொள்ளை, கைப்பேசி பறிப்பு, சங்கிலிப் பறிப்பு, பை பறிப்பு சம்பவங்கள் சா்வசாதாரணமாகி விட்டன. குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மேல் பயம் இல்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு அரசியல் சதி விவகாரங்களை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். எங்களிடம் சிறந்த போலீஸ் படை இருந்தது. ஆனால், மத்திய அரசு அதை மாற்றியுள்ளது. தற்போது காவல் துறையை அரசியல் கருவியாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இது காவல் துறைக்கும், தில்லி மக்களுக்கும் மிகவும் துரதிருஷ்டவசமான ஒன்று என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.
ஜி20 உச்சி மாநாட்டிற்குத் தயாராகி வரும் தில்லி நகரில், ‘காட்டு ராஜ்ஜியம்’ நிலவுவதாக, நகரின் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய அரசு மற்றும் துனை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த செவ்வாய்கிழமை கடுமையாகச் சாடியிருந்தாா். தில்லியின் சட்டம், ஒழுங்கு பொறுப்பை ஆம் ஆத்மி அரசிடம் ஒப்படைத்தால், தில்லியை நாட்டிலேயே ‘பாதுகாப்பான நகரமாக’ மாற்றுவோம் என்று கேஜரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...