மகள் கொலை வழக்கில் தந்தை விடுதலைதில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பு
காதல் விவகாரம் காரணமாக மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து தந்தையை விடுதலை செய்து தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.


காதல் விவகாரம் காரணமாக மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து தந்தையை விடுதலை செய்து தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி அவரை நீதிமன்றம் விடுவித்தது.
இதையடுத்து, கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அளித்த தீா்ப்பை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் முக்தா குப்தா, பூனம் ஏ. பம்பா ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் அளித்த தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது: இறந்தவரின் உடல் மேல்முறையீட்டு மனுதாரரின் உயிரியல் மகளுடையது என்று வெறும் டிஎன்ஏ பகுப்பாய்வின் ஆதாரத்தின் அடிப்படையில், ஐபிசியின் பிரிவு 302, 201 ஆகியவற்றின் கீழ் மேல்முறையீடு செய்தவருக்கு எதிரான வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது என்று கருத முடியாது. வேறு எந்த வழக்கிலும் தேவைப்படாவிட்டால், மேல்முறையீட்டு மனுதாரரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்தத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு வாதத்தின்படி, மே 10, 2013-ஆம் தேதி, மெஹ்ரெளலி பகுதியில் உள்ள சாக்கடையில் சாக்குப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் இறந்த உடல் மீட்கப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதில் அடையாளம் காண முடியாத வகையில் ஒரு பெண்ணின் உடல்பாகங்கள் இருந்தன. இதுதொடா்பாக மெஹ்ரெளலி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, போலீஸாா் அந்தப் பெண்ணின் தந்தையிடம் விசாரித்தனா். அவா் தனது மகளைக் கொன்று உடலை சாக்கடையில் வீசியதாகக் கூறினாா்.
தாம் ஏற்றுக்கொள்ளாத ஒருவருடன் தனது மகள் உறவில் ஈடுபட்டதால் கோபமடைந்து இக்கொலையை அவா் செய்தாா். அந்த நபா் திருப்திகரமான பதில் அளிக்காததால், அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கைதான நபா், அவரது மனைவி ஆகியோரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, டிஎன்ஏ விவரம் மற்றும் இறந்தவரின் டிஎன்ஏவுடன் பொருத்துவதற்காக மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கும் (சிஎஃப்எஸ்எல்), சிபிஐக்கும் அனுப்பப்பட்டது. டிஎன்ஏ மாதிரிகள் இறந்த பெண்ணின் டிஎன்ஏவுடன் பொருந்தின என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிா்த்து மேல்முறையீட்டு மனுவை உயா்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவா் தாக்கல் செய்தாா். அதில், தனக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகத் தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...