அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நிலக்கரியை உரிய முறையில் எடுத்து செல்வதற்கு 67 எஃப்எம்சி திட்டங்கள்: 2027-ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு

நிலக்கரிகளை சுரங்கங்களிலிருந்து பயன்பாடு இடங்களுக்கு விரைவாக கொண்டு செல்லப்படும் 67 பகுதிகளுக்கான எஃப்எம்சி என்கிற முதல் மைல் இணைப்புத் திட்டம் 2027 - ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு

News image
Updated On :5 மே 2023, 5:04 pm

 நமது நிருபர்

நிலக்கரிகளை சுரங்கங்களிலிருந்து பயன்பாடு இடங்களுக்கு விரைவாக கொண்டு செல்லப்படும் 67 பகுதிகளுக்கான எஃப்எம்சி என்கிற முதல் மைல் இணைப்புத் திட்டம் 2027 - ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக என மத்திய நிலக்கரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுவாக நிலக்கரி தட்டுப்பாடு என்பது,சுரங்கங்களில் இருந்து மின் நிலையங்களுக்கு நிலக்கரி வருவதில் ஏற்படும் தாமதாகும். நிலக்கரித் துறையில் எஃப்எம்சி என்கிற முதல் மைல் இணைப்புத் திட்டம் என்பது சுரங்கங்களிலிருந்து அது அனல் மின்நிலையம் உள்ளிட்ட பயன்பாடு இடங்களுக்கு முறையாக விரைவாக எடுத்துச் செல்வது வரையிலான பல்வேறு பணிகளைக் குறிப்பதாகும். இதை முன்னிட்டு எஃப்எம்சி திட்டங்களின் நிலை குறித்து மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலா் எம். நாகராஜூ தலைமையில் தில்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னா் மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: மத்திய நிலக்கரி அமைச்சகம் ஆண்டுக்கு 885 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 67 எஃப்எம்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் கோல் இண்டியா லிமிடெட் (சிஐஎல்) நிறுவனத்திற்கு தொடா்புடைய 59 திட்டங்களும், சிங்கரேணி காலியரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு (எஸ்சிசிஎல்) 5, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு (என்எல்சிஐஎல்) 3 திட்டங்களும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டங்கள் 2027-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

இந்த எஃப்எம்சி திட்டங்களில் நிலக்கரிச் சுரங்கங்களில், மாசுகளுக்கு காரணமான சாலைப் போக்குவரத்து தவிா்க்கப்பட்டு இயந்திரமயக்கப்பட்ட நோக்கில், எஃப்எம்சி திட்டத்தின் கீழ் இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரிப் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதாகும். சுரங்கங்களில் இருந்து எடுத்துச் செல்வதில் மனித செயல்பாடு குறைப்பு, அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி (கட்டி) அளவு, துல்லியமான எடை, சிறந்த நிலக்கரித் தரம், விரைவாக ஏற்றுதல் ஆகியவை எஃப்எம்சி திட்டங்களின் நன்மைகளாகும். குறிப்பாக நிலக்கரி அளவை சரி செய்யக்கூடிய இயந்தி (அரைவு) வசதி, ஏற்றி, இறக்கும் நேரம் குறைக்கப்படுவதற்கான கணினி போன்றவை மூலம் ரயில்வே ரேக்குகள் மற்றும் வேகன்கள் எளிதாகக் கிடைக்கப் பெற்று நிலக்கரியை விரைவாக பயன்பாட்டு இடங்களுக்கு கொண்டு செல்வதாகும். இதை முன்னிட்டு எஃப்எம்சி திட்டத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கவும், அதே சமயத்தில் நிலக்கரி இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டில் நிலக்கரியை உற்பத்தி செய்ய மத்திய நிலக்கரி அமைச்சகம், 2025- ஆம் நிதியாண்டிற்குள் 1.3 பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது. இது 2030-ஆம் நிதியாண்டில் 1.5 பில்லியன் டன்னாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுயசாா்பு நிலையையும் நாடு அடையும் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.