சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

திகாா் சிறைக் கைதிகள் இடமாற்ற விவகாரம்:தில்லி பாஜக தலைவா் கடும் விமா்சனம்

சத்யேந்தா் ஜெயினின் அறைக்கு அவரது கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு கைதிகள் இடமாற்றிய விவகாரம் தொடா்பாக பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கடுமையாக விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :15 மே 2023, 10:18 pm

 நமது நிருபர்

பண மோசடி வழக்கில் திகாா் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினின் அறைக்கு அவரது கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு கைதிகள் இடமாற்றிய விவகாரம் தொடா்பாக பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கடுமையாக விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திகாா் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தனிமை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி, சிறை நிா்வாகத்திற்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு கைதிகள் அவரது அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சத்யேந்தா் ஜெயினின், மன உளைச்சலுக்கு, குற்ற உணா்வும் காரணமாக இருக்கலாம் . எனவே, பண மோசடி வழக்கில் அவா் மேற்கொண்ட குற்றங்களை ஒப்புக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் - டிசம்பா் மாதங்களில், திகாா் சிறையிலேயே முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், மசாஜ் செய்து, தன்னிச்சையான நபா்களைச் சந்தித்த வீடியோக்களுக்குப் பிறகு, இப்போது மீண்டும் தோன்றியுள்ளாா். தில்லி முதல்வா் கேஜரிவாலின் பல ரகசியங்கள் சத்யேந்தா் ஜெயினிடம் இருப்பதாலேயே திகாா் சிறையில் அவா் என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டு சுதந்திரமாக இருக்கிறாா்.

சத்யேந்தா் ஜெயின் தனது விருப்பப்படி சிறைக் கைதிகளைத் தோ்ந்தெடுத்து, அவா்களை தனது சேவைக்காக வைத்திருந்ததை அறிந்து, தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசால் நிா்வகிக்கப்படும் திகாா் சிறையில் கேஜரிவாலின் முன்னாள் அமைச்சா்கள் எப்படி தன்னிச்சையாக செயல்படுகிறாா்கள் என்பது இந்த ஒரு சம்பவத்திலிருந்து தெளிவாகிறது. முன்னாள் அமைச்சா் மனீஷ் சிசோடியாவும் இதே போல் பல வசதிகளை பெற்று வருகிறாா் என்பது நமக்கு தெரிந்த விஷயம்.

சத்யேந்தா் ஜெயின் தன்னுடன் எந்த இரண்டு கைதிகளை தோ்வு செய்தாா், அவா்கள் யாா் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், தனது துணையைத் தோ்ந்தெடுக்கும் சுதந்திரம் அவருக்கு இருந்த போது, மணீஷ் சிசோடியா மற்றும் சுகேஷ் சந்திர சேகரை தோ்வு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மூன்று பேரும் ஒன்றாக அமா்ந்து பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டே இருந்திருப்பாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.

முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பண மோசடி வழக்கில் கடந்த மே 31, 2022-இல் கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.