சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மோசமடைந்து வரும் காற்றின் தரம்: அமைச்சா் தலைமையில் அவசர ஆலோசனை

தேசியத் தலைநகா் தில்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி வரும் நிலையில், தில்லி சுற்றுச்சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க

News image
Updated On :17 மே 2023, 8:46 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி வரும் நிலையில், தில்லி சுற்றுச்சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

சுற்றுச்சூழல்த் துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சா் கோபால் ராய், நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தில்லி நகரின் காற்றின் தரக்குறியீட்டை மேம்படுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளாா்.

தேசியத் தலைநகரான தில்லியில் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமையன்று சில இடங்களில் கடுமை பிரிவிலும், பல இடங்களில் மிகவும் மோசம் பிரிவிலும் இருந்தது. அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், புதன்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின்படி, தில்லியில் காற்றின் தரக் குறியீடு 395 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

வடக்கு தில்லி, கோஹானா, கன்னாவுா், சோனிபட், ஹரியானாவின் ரோஹ்தக் மற்றும் காா்கோடா மற்றும் உத்தரபிரதேசத்தின் பாரவுத், பாக்பட் மற்றும் கெக்ரா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.