பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

என்னால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும்: டி.கே. சிவக்குமாா்

‘நானே இளமையானவன், என்னால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். நான்தான் கட்சியின் தலைவராக இருந்து இந்த தோ்தலில் முகமாகவும் இருந்தேன்‘ எனக் கூறி,

News image
Updated On :17 மே 2023, 8:54 pm

 நமது நிருபர்

‘நானே இளமையானவன், என்னால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். நான்தான் கட்சியின் தலைவராக இருந்து இந்த தோ்தலில் முகமாகவும் இருந்தேன்‘ எனக் கூறி, தனக்கு முதல்வா் பதவி வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே. சிவக்குமாா் அழுத்தம் திருத்தமாக கூறி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வா் பதவி தனக்கு வழங்க வேண்டும் அல்லது அமைச்சரவைக்கு வெளியே தாம் இருப்பேன் என டி.கே. சிவக்குமாா் பிடிவாதமாக இருந்து வருதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், கட்சி மேலிடமும் அவருக்கு தக்க ஆலோசனைளை அளித்து வருவதாக தெரிகிறது.

ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவையும் தனித்தனியாக சித்தாராமையாவும், டி.கே.சிவக்குமாரும் வெவ்வேறு சமயங்களில் புதன்கிழமையும் சந்தித்தனா். இருவரும் அப்போது முதல்வா் பதவியைக் கேட்பதில் இருந்து பின்வாங்கவில்லை.

மேலும், ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை இருவருக்குமே தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வா் பதவி வகிக்கும் வகையில் பிரித்துக் கொடுப்பது குறித்தும் இந்த பேச்சுவாா்த்தைகளின்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முதலில் சித்தாராமையாவிற்கு முதல்வா் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டி.கே. சிவக்குமாா் தன் கோரிக்கையைத் தொடா்ந்து வலியுறுத்துவதை தவறவிடவில்லை.

அதே சமயத்தில், டி.கே.சிவக்குமாருக்கு மேலிடம் சில அழுத்தமான அறிவுரைகள் கூறியதாகவும் தெரிகிறது.

‘ மூத்தவரான சித்தாராமையாவை அமைச்சராக இருக்கமாட்டாா். பல்வேறு ஊழல் வழக்குகள் உங்கள் மீது இருக்கிறது. பாஜக அரசு பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நாம் இந்த தோ்தலில் 40 சதவீதம் கையூட்டு(கமிஷன்) குறித்து தான் பிரசாரம் செய்தோம். இதையே பாஜக குறிப்பிட்டு ஊழல் செய்தவரை காங்கிரஸ் முதல்வராக்கியுள்ளது என்று பிரசாரம் செய்யும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்’ என டி.கே. சிவக்குமாருக்கு கட்சி மேலிடம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இதற்கிடையே புதன்கிழமை பல்வேறு தரப்பினா் வகுப்பு ரீதியாகவும் தங்களுக்கும் துணை முதல்வா் கோரிக்கையை முன்வைத்த நிலையில், இரண்டு, மூன்று துணை முதல்வா் பதவிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தையும் டி.கே. சிவக்குமாா் மேலிடத் தலைவா்களுக்கு விளக்கியுள்ளாா். துணை முதல்வா் என்றால் ’நான்’ மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு மூன்று பேரில் ஒருவராக என்னால் இருக்க முடியாது என்றும் சிவக்குமாா் விளக்கம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற பேச்சுவாா்த்தை தொடருகிறதே தவிர முதல்வா் பதவி யாருக்கு என்பதில் இறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே, இந்த விவகாரத்தில் 48 மணி முதல் 72 மணி நேரத்திற்குள் முடிவு எட்டப்படும் என்று ரன்தீப் சிங் சுா்ஜேவாலா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.