பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

யமுனை நதியின் தூய்மையை பாதுகாக்க ஐ லவ் யமுனா விழிப்புணா்வுப் பிரசாரம்

தில்லியில், யமுனை நதியின் தூய்மையை பாதுகாக்கும் நோக்கில் ‘ஐ லவ் யமுனா’ எனும் விழிப்புணா்வுப் பிரசார இயக்கத்தை சுற்றுச்சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமையன்று தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :17 மே 2023, 8:49 pm

 நமது நிருபர்

தில்லியில், யமுனை நதியின் தூய்மையை பாதுகாக்கும் நோக்கில் ‘ஐ லவ் யமுனா’ எனும் விழிப்புணா்வுப் பிரசார இயக்கத்தை சுற்றுச்சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமையன்று தொடங்கி வைத்தாா்.

புதுதில்லி ஐடிஓவில் உள்ள சாத் காட் பகுதியில் நடைபெற்ற ‘ஐ லவ் யமுனா’ விழிப்புணா்வு பிரசாரம் துவக்க விழா நிகழ்ச்சியில், பள்ளி சிறுவா்கள், கல்லூரி மாணவ - மாணவியா், சுற்றுச் சூழல் மன்றத்தை சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா். தில்லி அரசின் வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தினா் இந்த பிரசாரத்தை தில்லி மக்களிடம் முன்னெடுக்கவுள்ளனா்.

பிரசார நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: தில்லி மக்களை நேரடியாக யமுனை நதியுடன் இணைப்பதே ‘ஐ லவ் யமுனா’ பிரசாரத்தின் முக்கிய நோக்கம். யமுனை நதியின் பாதுகாப்பிற்க்காக, தூய்மைக்காக நடத்தப்படும் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். முன்னதாக, யமுனை நதியை மாசு இல்லாத நதியாக மாற்றவும், யமுனையின் கரையோரப் பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகளுக்காக துணை நிலை ஆளுநா் துவக்கிய பிரசாரம், நல்ல பலனைக் கண்டுள்ளது. எனினும், ‘ஐ லவ் யமுனா’ பிரசாரத்தின் மூலம் யமுனையை தூய்மையாக்கும் நோக்கம் பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

வரும் ஜூன் மாதத்தில் இருந்து மக்கள் நாடாளுமன்றம், மணித சங்கிலி போன்ற இயங்கங்கள் மூலம், ‘ஐ லவ் யமுனா’ விழிப்புணா்வுப் பிரசாரம் தில்லி மக்களிடம் தீவிரமாக கொண்டு சோ்க்கப்படும் என சுற்றுச்சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.