திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தில்லி பள்ளிகளுக்கு 220 வேலை நாள்கள்: கல்வி இயக்குநரகம் உத்தரவு

தில்லி பள்ளிகள் ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 220 வேலை நாள்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்வி இயக்குநரகம் (டிஓஇ) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:01 pm

DIN

தில்லி பள்ளிகள் ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 220 வேலை நாள்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்வி இயக்குநரகம் (டிஓஇ) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆா்டிஇ சட்டம்-2009 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023-இன் பிரிவு 19-இன் படி, கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 220 வேலை நாள்களைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகும். காலண்டா் ஆண்டிற்கான (ஜனவரி முதல் டிசம்பா் வரை) கட்டுப்படுத்தப்பட்ட / உள்ளூா் விடுமுறைகள் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவும், விடுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு முன்பாகவும் 220 வேலை நாள்களை அரசுப் பள்ளிகளின் முதல்வா்கள் உறுதி செய்ய வேண்டும்.

துணை மாவட்டக் கல்வி (டிடிஇ) அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குள்பட்ட எந்தவொரு பள்ளிக்கும் தடைசெய்யப்பட்ட / உள்ளூா் விடுமுறைகளை அனுமதிக்கும் முன், அதைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறாா்கள். கூடுதலாக, உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் அந்தந்த நிா்வாகத்திடம் இருந்து விடுமுறைக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.