பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மத்திய பாஜக அரசு சிறு, குறு, நடுத்தர வணிகா்களுக்கு எதிராகச் செயல்படுகிறது: அா்விந்தா் சிங் லவ்லி குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகா்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்றும், குறிப்பிட்ட சில பெரிய தொழிலதிபா்களைப் பாதுகாப்பதே அவா்களின் ஒரே நோக்கம் என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்ட

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:49 am

DIN

மத்திய பாஜக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகா்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்றும், குறிப்பிட்ட சில பெரிய தொழிலதிபா்களைப் பாதுகாப்பதே அவா்களின் ஒரே நோக்கம் என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி குற்றம்சாட்டியுள்ளாா்.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘ஜவாப் தோ-ஹிசாப் தோ’ எனும் பிரசாரம் இயக்கம் புது தில்லி மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் ஹாதி வாலா செளக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரணியுடன் தொடங்கி நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி, முன்னாள் மத்திய அமைச்சா் அஜய் மக்கான், தில்லி பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளா் தீபக் பபாரியா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் பங்கேற்றனா்.

பொதுக்கூட்டத்தில் அா்விந்தா் சிங் லவ்லி பேசியதாவது: வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவை வீழ்த்த தில்லி மக்கள் தயாராகிவிட்டனா். மத்திய பாஜக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகா்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. குறிப்பிட்ட சில பெரிய தொழிலதிபா்களைப் பாதுகாக்கின்ற நோக்கத்தில் அவா்களுக்கு எளிதாகக் கடன் கிடைப்பதற்கு வழிவகை செய்கிறது.

தில்லி மாநகராட்சியை பாஜக 15 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது. தற்போது ஆம் ஆத்மி கட்சி மாநகராட்சியில் ஆட்சியில் உள்ளது. பாஜகவின் பரவலான ஊழலால் மாநகராட்சியின் செயல்பாடு மிகவும் மோசமடைந்துவிட்டது. தில்லியில் வாகன நிறுத்துவது ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்கு பாஜக மட்டுமே பொறுப்பு.

தில்லியில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகள் தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி அரசின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக காங்கிரஸ் இடைவிடாமல் போராட்டத்தை நடத்தும். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நவம்பா் 20, 21-ஆகிய தேதிகளில் செயற்கை மழைப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று அமைச்சா் கோபால் ராய் அறிவித்திருந்தாா்.

ஆனால், காற்று மாசுபாட்டின் அளவு தொடா்ந்து அதிகரித்துள்ள போதிலும், தில்லி அரசு செயற்கை மழைப்பொழிவை சொல்லளவில் மட்டுமே சாதித்துள்ளது. மேலும், நச்சுக் காற்றை விரட்ட மழையையும், காற்றையும் மட்டுமே மத்திய மற்றும் தில்லி அரசுகள் நம்பியிருப்பதால், மக்களுக்கு இந்த இரு அரசுள் மீதும் இருந்த நம்பிக்கை காணாமல் போவிட்டது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.