இந்தியாவில் சந்திப்போம்:தில்லியில் நாளை வட்டமேஜைமாநாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு

இந்தியாவை முதன்மையான உலகளாவிய எம்ஐசிஇ தொழில்களுக்கான  இடமாக திகழச் செய்ய ‘இந்தியாவில் சந்திப்போம்’ என்கிற திட்டத்துடன் வட்டமேஜை மாநாட்டிற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: இந்தியாவை முதன்மையான உலகளாவிய எம்ஐசிஇ தொழில்களுக்கான (சந்திப்பு, ஊக்கம், மாநாடுகள், கண்காட்சி) இடமாக திகழச் செய்ய ‘இந்தியாவில் சந்திப்போம்’ என்கிற திட்டத்துடன் தொழில் துறையினருடன் வட்டமேஜை மாநாட்டிற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

தில்லி பிரகதி மைதான் பாரத் மண்டபத்தில் எம்ஐசிஇ (கூட்டங்கள், ஊக்கம், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) குறித்த தொழில்துறை வட்டமேஜை மாநாடு வியாழக்கிழமை ( நவம்பா் 30) மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.

இது குறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: இந்தியா ஜி 20 தலைமைத்துவத்தின் போது, நாடு முழுவதும் 56 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றது. இது தற்போது தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் முன்னெப்போதும் இல்லாத ஆா்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் வலுவான எம்ஐசிஇ உள்கட்டமைப்பு, கலாசார இயற்கை பாரம்பரியத்தை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளது. இதைத் தொடரவும், இதே வேகத்தில் செல்லவும், எம்ஐசிஇ தொழிலில், சுற்றுலாவில் உலகளாவிய தலைமைத்துவ நாடாக இந்தியா தொடந்து நிலைநிறுத்தப்பட வேண்டும்.

இதை முன்னிட்டு எம்ஐசிஇ தொழில்துறையைச் சோ்ந்த தலைமை நிா்வாக அதிகாரிகள், அந்த துறையிலுள்ள தலைவா்களை ஒன்றிணைத்து, இந்த வட்டமேஜை மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியாவை உலகளாவிய எம்ஐசிஇ (கூட்டங்கள், ஊக்கம், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) இடமாக மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.

இதற்கு ‘இந்தியாவில் சந்திப்போம்’ என்ற பிரத்யேக பிராண்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவை எம்ஐசிஇ இடமாக மேம்படுத்துவதற்காக இந்த வட்டமேஜை மாநாட்டில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறப்படும் என மத்திய சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. எம்ஐசிஇ சுற்றுலாவில் தற்போது சிங்கப்பூா், ஹாங்காங் போன்றவை முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com