புது தில்லி: தில்லி ஜெய்த்பூா் கடா காலனியில் சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை பாஜக தில்லி பிரிவு சிறுபான்மை அணியின் தலைவா்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.
தெற்கு தில்லியில் உள்ள ஜெய்த்பூா் கடா காலனியில் கடந்த நவம்பா் 24-ஆம் தேதி சட்டவிரோதக் கட்டுமானத்தின் அடித்தளத்தை தோண்டும் போது சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், ஒரு பெண் படுகாயமடைந்தாா். இந்த நிலையில், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவா் அதிஃப் ரஷீத் மற்றும் பாஜக தில்லி பிரிவு சிறுபான்மை அணியின் தலைவா் அனீஸ் அப்பாசி ஆகியோா் தலைமையில் சிறுபான்மை அணியின் பிரதிநிதிகள் குழு கட்டடம் இடிந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோா் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்கிழக்கு தில்லியின் கூடுதல் துணைக் காவல் ஆணையா் ஹா்ஷ் இந்தூரை நேரில் சந்தித்தும் சிறுபான்மை அணியின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது.
பின்னா், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவா் அதிஃப் ரஷீத் கூறுகையில், ‘இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கட்டடம் இடிந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தில்லி அரசு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். அது வரையில், தில்லி பாஜக சட்டப்பேரவை வரை போராடும் ’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

நஜஃப்கா் தில்லி கேட்டை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எம்.சி.டி. நடவடிக்கை

சரக்கு ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

