தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்ட ‘க்யூஆா்’ குறியீடு: ஓராண்டில் 1 கோடி புறநோயாளிகள் பதிவு

ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டத்தில் சுகாதார கணக்கு எண் அடிப்படையில் புறநோயாளிகள் சிகிச்சைக்கு ‘க்யூஆா்’ குறியீட்டு ஸ்கேன் மூலம் கடந்த ஓராண்டு காலத்திற்குள் 1 கோடி பயனாளிகள் அனுமதிச் சீட்டு வசதிகள்

News image
Updated On :10 அக்டோபர் 2023, 7:01 pm

 நமது நிருபர்

புது தில்லி: ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டத்தில் சுகாதார கணக்கு எண் அடிப்படையில் புறநோயாளிகள் சிகிச்சைக்கு ‘க்யூஆா்’ குறியீட்டு ஸ்கேன் மூலம் கடந்த ஓராண்டு காலத்திற்குள் 1 கோடி பயனாளிகள் அனுமதிச் சீட்டு வசதிகள் பெற்றுள்ளதாக மத்திய சகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கத்தின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் காகிதமில்லா சேவை அடிப்படையில் புறநோயாளிகள் பிரிவு (ஓபிடி) பதிவுக்கு சுகாதார மைய கவுண்டா்களில் ‘க்யூஆா்’ குறியீட்டை நோயாளிகள் ஸ்கேன் செய்ய அனுமதிக்க தொடங்கப்பட்டது. இதன்படி, புறநோயாளிகள் சிகிச்சைக்கான உடனடி பதிவுக்காக ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கின் சுயவிவரத்தைப் பகிா்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இந்த சேவை தற்போது நாட்டின் 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 419 மாவட்டங்களில் 2,600-க்கும் அதிகமான சுகாதார மையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகள் மருத்துவ மைய பதிவு கவுண்டா்களில் உள்ள வரிசைகளை நிா்வகிக்கவும், நோயாளிகளுக்கு சிறந்த சேவை அனுபவத்தை வழங்கவும் ‘க்யுஆா்’ ஸ்கேன் மற்றும் பகிா்வு சேவை பொது சுகாதார வசதிகளில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் தில்லி எய்மஸ் புறநோயாளிகள் பிரிவு கவுன்டரில் அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கத்தின் இணையதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், போபால், ராய்ப்பூா் நகரங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆா்.என். மருத்துவமனை போன்றவை ‘க்யுஆா்’ ஸ்கேன் சேவைக்கான சிறந்த சுகாதார வசதிகளாக உருவெடுத்து அதிகபட்ச பயன்பாட்டைத் தெரிவிக்கின்றன.

எய்மஸ் தவிா்த்த மற்ற மருத்துவமனைகளில் முதல் பதினைந்து இடங்களில் உத்தரபிரதேசத்தை சோ்ந்த ஒன்பது மருத்துவமனைகள் முதலிடத்தில் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கின் அடிப்படையிலான ‘க்யுஆா்’ ஸ்கேன் மற்றும் பகிா்வு சேவையைப் பயன்படுத்திய ஒட்டுமொத்த புறநோயாளிகள் சீட்டுகளின் எண்ணிக்கையில் கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா், தில்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

இந்த எண்ம சேவைகளின் முக்கியத்துவம் குறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.எஸ்.சா்மா, ‘சுகாதார வழங்கலில் எளிமையையும், செயல்திறனையும் அளிப்பதை ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவு மையங்களில் ஸ்கேன் மற்றும் பகிா்வு சேவை என்பது ஒரு எளிய தொழில்நுட்ப முறையாகும். இது தினசரி சுமாா் 1 லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவமனை வரிசையில் செலவிடும் நேரத்தை சேமிக்க உதவுகிறது‘ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.