தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தெற்குலக நாடுகள், வளரும் நாடுகளின் உண்மையான விசுவாசி: இந்தியா தான்ஸானியா அதிபா் பேச்சு

தெற்குலக நாடுகள், வளரும் நாடுகளின் நோக்கத்திற்கு இந்தியா உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளதாக தான்ஸானியா அதிபா் டாக்டா் சாமியா சுலுஹு ஹசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2023, 7:09 pm

 நமது நிருபர்

புது தில்லி: தெற்குலக நாடுகள், வளரும் நாடுகளின் நோக்கத்திற்கு இந்தியா உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளதாக தான்ஸானியா அதிபா் டாக்டா் சாமியா சுலுஹு ஹசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தான்ஸானியாவின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹசனுக்கு தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) கௌரவ டாக்டா் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இந்தியா-தான்ஸானியா இடையே நட்புறவை வலுப்படுத்துவதிலும், பொருளாதார ராஜதந்திர ஊக்குவிப்பு, பிராந்திய ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மையில் வெற்றி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகித்ததற்காக தான்ஸானியாவின் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹசனுக்கு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது. மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெய்சங்கா்; கல்வி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்; இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி ஜே.என்.யு. வேந்தா் கன்வல் சிபல் ஆகியோா் முன்னிலையில் தான்ஸானியா அதிபா் சாமியா சுலுஹு ஹசனுக்கு பல்கலைக்கழக த் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் இந்த கௌரவ டாக்டா் பட்டத்தை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றி டாக்டா் சாமியா சுலுஹு ஹசன் பேசியதாதவது: தான் ஒரு ‘இந்திய (கல்வி) தயாரிப்பு’. ஹைதராபாதில் உள்ள என்.ஐ.ஆா்.டி.யில் தனது ஐ.டி.இ.சி. (இந்திய தொழில்நுட்பம் பொருளாதார ஒத்துழைப்பு) பயிற்சியை பெற்றேன். ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் இந்த விருது மூலம் எனக்கு உயரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது. இந்தியாவின் அழகான நிலப்பரப்பு மட்டுமல்ல; அதன் தாராள மனப்பான்மை, மக்களின் கருணை இந்தியாவை ‘ வியத்தகு இந்தியா’ ஆக்குகிறது. இந்தியா அனைத்து காலக்கட்டங்களுக்கும் நம்பகரமான பங்குதாரராகவும் நண்பனாகவும் உள்ளது. தெற்குலக நாடுகள், வளரும் நாடுகளின் நோக்கத்திற்கு இந்தியா உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளது. பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை இந்தியா தொடா்ந்து நிலைநிறுத்தி வருவதோடு, சந்தையை விட சமூகத்தை மதிப்பதை முதலிடமாகக் கொண்டுள்ளது என பாராட்டி கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியதற்கு அவா் நன்றியைத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியாவுடன் சாமியா சுலுஹு ஹசனுக்கு உள்ள நீண்ட காலத் தொடா்பு, நட்பை அங்கீகரித்து கல்வி சாா்ந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. கல்வியும், திறன் உருவாக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்தியா, தான்ஸானியா கல்வித் திட்டத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தான்ஸானியாவினா் இந்தியாவில் பயிற்சி பெற்றுள்ளனா். தான்ஸானியாவில் ஐ.ஐ.டி.யும் அமைய இருக்கிறது. இந்த நிறுவனம் முழு ஆப்பிரிக்க கண்டத்திற்கும் தொழில்நுட்ப கல்விக்கான முதன்மை மையமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஜி 20-இல் ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஒரு முழு உறுப்பினராகச் சோ்த்தது இந்திய தலைமைத்துவத்தின் மிக உயா்ந்த வெற்றிகளில் ஒன்று’ என்றாா்.

மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசுகையில்,‘55,000 கல்வி நிறுவனங்கள், 42 மில்லியன் மாணவா்கள் மற்றும் 1.6 மில்லியன் ஆசிரியா்களுடன் இந்தியா ஒரு துடிப்பான உயா் கல்வி சூழலைக் கொண்டுள்ளது. கல்வி முறையில் மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நமது நாடு பெரும் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தான்ஸானியாவைச் சோ்ந்த பிரதிநிதிகள், ஆப்பிரிக்க நாடுகளின் 15 தூதரகங்களின் தலைவா்கள், கல்வியாளா்கள், தான்ஸானியா மாணவா்கள் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.