தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோத ஆள்சோ்ப்பு மூலம் அமானத்துல்லா கான் பெரும் பணம் பெற்றிருக்கிறாா்: அமலாக்கத் துறை தகவல்

தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோத ஆள்சோ்ப்பு மூலம் பணமாக பெரும் குற்ற வருவாயைப் பெற்று அவரது கூட்டாளிகளின் மூலம் அசையா சொத்துகளை வாங்குவதில்

News image
Updated On :11 அக்டோபர் 2023, 8:36 pm

 நமது நிருபர்

தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோத ஆள்சோ்ப்பு மூலம் பணமாக பெரும் குற்ற வருவாயைப் பெற்று அவரது கூட்டாளிகளின் மூலம் அசையா சொத்துகளை வாங்குவதில் அமானத்துல்லா கான் முதலீடு செய்ததாக அமலாக்கத் துறை புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கான் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்திய மறுதினம் அமலாக்கத் துறை இத்தகவலை தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மற்றும் அவருடன் தொடா்புடைய நபா்களுடன் தொடா்புடைய 13 இடங்களில் சோதனை நடத்தியது.

இதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2018-2022 ஆம் ஆண்டில் அமானத்துல்லா கான் வக்ஃபு வாரியத்தின் தலைவராக இருந்த போது, வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை ஆள்சோ்ப்பு செய்தல் மற்றும் வக்ஃபு வாரிய சொத்துகளை நியாயமற்ற முறையில் குத்தகைக்கு விடுவதன் மூலம் சட்டவிரோதமாக தனிநபா் ஆதாயங்கள் பெற்றது தொடா்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் மற்றும் தில்லி காவல் துறையின் 3 புகாா்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு எதிராக இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமானத்துல்லா கான், குற்றச் செயல்களில் இருந்து பெரும் வருமானத்தை பணமாகப் பெற்றுள்ளாா். மேலும், இந்த ரொக்கத் தொகை தில்லியில் உள்ள பல்வேறு அசையா சொத்துகளை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்குவதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பணமோசடியில் அமானத்துல்லா கானின் பங்கை குறிப்பிடும் பல குற்றம்சாட்டும் ஆவணப் பதிவுகள் மற்றும் நேரடி, டிஜிட்டல் ஆதாரங்கள் ஆகியவை இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமானத்துல்லா கான் புதன்கிழமை சந்தித்தாா். இதன் பிறகு முதல்வா் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரம் நடந்து வருவதாகவும், கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளாா். 49 வயதான அமானத்துல்லா கான், ஓக்லா சட்டப் பேரவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எல்எல்ஏவாக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.