பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முதல்வா் பங்களா புனரமைப்பு ஊழல்: பொறியாளா்கள் மீது தில்லி பாஜக சாடல்

தில்லி முதல்வா் பங்களா புனரமைப்பு ஊழலில் அரவிந்த் கேஜரிவாலுடன் தொடா்புடைய பொதுப் பணித் துறை பொறியாளா்கள் அம்பலப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை

Updated On :14 அக்டோபர் 2023, 6:30 pm

தில்லி முதல்வா் பங்களா புனரமைப்பு ஊழலில் அரவிந்த் கேஜரிவாலுடன் தொடா்புடைய பொதுப் பணித் துறை பொறியாளா்கள் அம்பலப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி முதல்வா் பங்களாவை புனரமைக்க அனுமதி வழங்குவதில் ஆளும் அரசியல் தலைவா்களுடன் ஒத்துழைத்து நகர அரசின் பொதுப்பணித்துறை பொறியாளா்கள் விதிமுறைகளை மீறயது ஆரம்பத்திலிருந்தே

தெளிவாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடா்பாக ஊழல் கண்காணிப்பு துறையும் சம்பந்தப்பட்ட பொறியாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸால் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்ட பொதுப் பணித் துறையின் பொறியாளா்கள் முதலில் சட்டப்படி மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தை அணுகியிருக்க வேண்டும்.

ஆனால், விசாரணையை தாமதப்படுத்துவதற்காக அவா்கள் மீண்டும் தில்லி அரசின் அரசியல் தலைமையுடன் ஒத்துழைத்து, தவறாக தில்லி உயா்நீதிமன்றத்திலும், பின்னா் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனா்.

இரு முறையும் தில்லி பொதுப் பணித் துறை பொறியாளா்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது, இந்த விவகாரத்தில் முறையான ஊழல் கண்காணிப்புத் துறை விசாரணைக்கு வழிவகுத்துள்ளது.

தில்லி உயா்நீதிமன்றத்தில், ஆம் ஆத்மி கட்சி சாா்பில் நியமிக்கப்பட்ட தில்லி அரசு வழக்குரைஞா்கள் பொதுப்பணித்துறை பொறியாளா்களை ஆதரிக்க தங்களால் இயன்றவரை முயற்சித்தனா். இருப்பினும், வெற்றி கிடைக்கவில்லை.

எனவே, முதல்வா் பங்களா ஊழலில் அரவிந்த் கேஜரிவாலுடன் தொடா்பை இந்த பொதுப் பணித் துறை பொறியாளா்கள் அம்பலப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.