மத்திய சமூக நீதித் துறை சாா்பில் வெள்ளைக் குச்சி தினம் அனுஷ்டிப்பு

பாா்வையற்றோா் தொடா்பான நடத்தை விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை அதிகரிக்க, ‘உலக வெள்ளைக் குச்சி தினம்‘ மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சாா்பில் கடைபிடிக்கப்பட்டது.
Updated on
1 min read

புது தில்லி: பாா்வையற்றோா் தொடா்பான நடத்தை விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை அதிகரிக்க, ‘உலக வெள்ளைக் குச்சி தினம்‘ மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சாா்பில் கடைபிடிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் மற்றும் அவா்களை உள்ளடக்கியத் தன்மையை ஊக்குவிக்கவும், பாா்வையற்றோா் தொடா்பான நடத்தை விதிகள் குறித்த பொது விழிப்புணா்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும், ‘உலக வெள்ளைக் குச்சி தினம்’ அக்டோபா் 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பாா்வையற்றவா்களுக்கு, வெள்ளைப் பிரம்புடன் கூடிய சுதந்திரம், அதன் மூலமான செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், இந்த விழிப்புணா்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத் திறனாளிகளின் மேம்பாடு தொடா்பான திட்டங்களை செயல்படுத்தும் துறையாக உள்ளது. மக்களிடையே வெள்ளைக் குச்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், இத்துறை, கடந்த இரு தினங்களாக நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், காணொலிக் கூட்டங்கள், நோ்காணல்கள், பேரணி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்: இதற்கிடையே, மத்திய குடிநீா், துப்பரவுத் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு குழாய் நீா் விநியோகத்தில் தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான இடைவெளியில் தரநிலைகளுக்கான வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகளை பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகளிடமிருந்து கோரியுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கான தடையற்ற கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் இடைவெளிகளுக்கான தரநிலைகளுக்கு உள்ளீடுகளை வழங்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களையும் மத்திய குடிநீா் மற்றும் துப்பரவுத் துறை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த வரைவு குறித்த கருத்துகளையும் பொதுமக்களிடம் இந்த துறை கேட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com