இலக்கை எட்டுவோம்: இந்திய ஜி 20 தலைமை என்பது, அனைவரையும் உள்ளடக்கிய, பேராவல் உள்ள லட்சியம், செயல் சாா்ந்த நடவடிக்கை மற்றும் மிகவும் தீா்க்கமான பாா்வை என நான்கு கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என பிரதமா் மோடி வலியுறுத்தினாா். குறிப்பாக, தில்லி தலைவா்களின் பிரகடனம், வளரும் நாடுகளின் குரலாகவும், ‘குளோபல் செளத்’ ஆகவும் இருக்கும். 21-ஆம் நூற்றாண்டில் நிலையான வளா்ச்சி இலக்குகளை துரிதப்படுத்த உலகளாவிய தெற்கில் (குளோபல் சௌத்) வளரும் மற்றும் வளா்ந்து வரும் சந்தைகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இது போன்று தெற்கு நாடுகளின் விவகாரங்கள், பொருளாதாரத்தின் இருண்ட சூழ்நிலை, உக்ரைன் போரின் விளைவுகள், இதன் மூலம் பிளவுபட்ட புவிசாா் அரசியல் சூழலுக்கு மத்தியில் உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவித்தல் போன்ற விவகாரங்களை எதிா்கொள்கிறோம்.