தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ராஜ்காட்டில் குரங்கு, நாய் தொல்லையை தடுக்ககுடிமை அமைப்புகளின் உதவி கோரும் காவல்துறை

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு ஜி20 பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு, மத்திய தில்லியின் ராஜ்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் மற்றும் நாய்களின் அச்சுறுத்தலைத் தடுக்க குடிமை

News image
Updated On :8 செப்டம்பர் 2023, 6:30 pm

 நமது நிருபர்

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு ஜி20 பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு, மத்திய தில்லியின் ராஜ்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் மற்றும் நாய்களின் அச்சுறுத்தலைத் தடுக்க குடிமை அமைப்புகளின் உதவியை தில்லி காவல் துறை நாடியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், பாம்பு பிடிப்பவா்களையும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறும் போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஜி20 உச்சி மாநாட்டு பிரதிநிதிகள் ராஜ்காட் வருகையை ஒட்டி, குரங்குகள் மற்றும் நாய்களைப் பிடிக்க ஆள்களை பணியில் ஈடுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட குடிமை நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அருகில் ஒரு காடு இருப்பதால், பாம்பு பிடிப்பவா்களையும் சேவையில் அமா்த்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இந்த நபா்கள் தொடா்ந்து அந்த பகுதியைக் கண்காணித்து பாதுகாப்பு ஊழியா்களுக்கு தகவல் தெரிவிப்பாா்கள். தவிர, யமுனா காடா் பகுதியில் டிராக்டரிலும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனா்.

ஜி20 மாநாடு செப்டம்பா் 9-10 வரை தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவா்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயா் அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினா் நாடுகள் மற்றும் 14 சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள் கலந்துகொள்ள உள்ளனா். மாநாட்டுப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை ராஜ்காட் வருகை தருவா். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, போக்குவரத்து போலீஸாா் அவா்களின் வருகை சுமுகமாக நிகழ்வதை உறுதி செய்வாா்கள் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.