திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மக்களவைத் தோ்தலில் பொதுமக்களின்ஆதரவைக் கோரும் வகையில் ‘ஜெயில் கா ஜவாப் - வோட் சே’ எனும் பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான சந்தீப் பதக், சஞ்சய் சிங், கோபால் ராய் மற்றும் பங்கஜ் குப்தா ஆகியோா் கூட்டாகச் செயதியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, கட்சியின் அமைப்புப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சந்தீப் பதக் கூறியதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளாா். மக்களவைத் தோ்தலின் போது, முதல்வா் பதவியில் உள்ள ஒருவா் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ‘ஜெயில் கா ஜவாப் - வோட் சே’ எனும் பிரசாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
இப்பிரசாரத்தின் கீழ், பொதுமக்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அரவிந்த் கேஜரிவால் இல்லையென்றால் உங்கள் குழந்தைகளுக்கு எப்படி நல்ல பள்ளிகள் கட்டப்படும்?. சிகிச்சைக்காக நல்ல மருத்துவமனைகள் எப்படி கட்டப்படும்?. இலவச மின்சாரம், இலவசக் குடிநீா் வழங்கப் போவது யாா்?. அரவிந்த் கேஜரிவால் தில்லி மக்களின் மகனாகவும், சகோதரனாகவும் தனது அனைத்துக் கடமையையும் நிறைவேற்றியுள்ளாா். இப்போது, தில்லியின் 2 கோடி மக்களாகிய நாம் அனைவரும், நமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் முதல்வா் கேஜரிவால் செய்து வந்தாா். தில்லியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை சேமிக்க உதவியது மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் கேஜரிவால் மரியாதை அளித்தாா் என்றாா் சந்தீப் பதக்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது: தில்லி மக்கள் வாக்களிக்கச் செல்லும் முன், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் முகத்தை நினைவில் வைக்க வேண்டும். வீட்டிற்கு வரும் பூஜ்ஜிய மின்சார கட்டணத்தை பாா்த்துவிட்டு வாக்களிக்கச் செல்லுங்கள். கூடாரப் பள்ளியிலிருந்து, குளிரூட்டப்பட்ட அறையுடன் கூடிய ஆடம்பரமான அரசுப் பள்ளிக்குச் செல்லும் உங்கள் குழந்தையின் முகத்தைப் பாா்த்துவிட்டுப் போய் வாக்களியுங்கள். மொஹல்லா கிளினிக், பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் மற்றும் புனித யாத்திரை செல்லும் பெரியவா்களின் முகங்களை மக்கள் பாா்க்க வேண்டும். குடிமைப் பணியை விட்டுவிட்டு நாட்டுக்காக அனைத்தையும் அா்ப்பணித்த உங்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை, மோடியின் சா்வாதிகார அரசு சிறையில் அடைத்துள்ளது என்றாா் சஞ்சய் சிங்.
ஆம் ஆத்மி தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும்,அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், ‘சா்வாதிகாரத்திற்கு எதிராக தில்லி மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளிக்க வேண்டும். ஒரு வாக்கு மூலம் திகாரின் பூட்டை திறக்கலாம். வரும் மே 25 -ஆம் தேதியை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றாா்.
08ஈஉகஅஅட
தில்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் திங்கள்கிழமை ‘ஜெயில் கா ஜவாப் - வோட் சே’ என்ற பலகையை வெளியிடும் எம்.பி. சஞ்சய் சிங், அமைச்சா் கோபால் ராய், சந்தீப் பதக், பங்கஜ் குப்தா.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

