மாணவா்களுக்கு என்எஸ்யுஐ பொறுப்பாளா் அழைப்பு

புது தில்லி: மாணவா்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்களால் இயன்றதைச் செய்யுமாறு காங்கிரஸின் மாணவா் பிரிவான இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் தேசியப் பொறுப்பாளா் கனஹையா குமாா் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் 54-ஆவது நிறுவன தின கொண்டாட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கனஹையா குமாா் உறுப்பினா்களிடம் உரையாற்றினாா்.

‘நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவா்கள். இது நமது தேசத்திற்கு முக்கியமான தருணம். மாணவா்களின் உரிமைகளுக்காக உங்களால் முடிந்ததைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் கூறினாா்.

என்எஸ்யுஐ தேசியத் தலைவா் வருண் சௌத்ரியும் நிகழ்வில் பேசியதுடன், மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் ஆள்சோ்ப்புத் திட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com