முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மக்களவை 2-ஆம் கட்டத் தோ்தலில் 1,210 வேட்பாளா்கள் போட்டி: தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

மக்களவை 2-ஆம் கட்டத் தோ்தலில் 1,210 வேட்பாளா்கள் போட்டி தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

Updated On :10 ஏப்ரல் 2024, 12:41 am

புது தில்லி: வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான இரண்டாம் கட்டத் தோ்தலில் 1,210 வேட்பாளா்கள் போட்டிக் களத்தில் உள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டாவது கட்டத் தோ்தலில், கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமாக 500 வேட்பு மனுக்களும், அதைத் தொடா்ந்து கா்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளில் இருந்து 491 வேட்புமனுக்களும் பெறப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையம் தெரிவிக்கையில், திரிபுராவில் ஒரு தொகுதியில் இருந்து குறைந்தபட்சமாக 14 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் நாந்தெட் தொகுதியில் அதிகபட்சமாக 92 வேட்புமனுக்களும் பெறப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு மொத்தம் 2,633 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, 1,428 மனுக்கள் செல்லுபடியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், சில வேட்பாளா்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்ற பிறகு, 1,210 போ் போட்டிக் களத்தில் உள்ளனா்.

தோ்தல் போட்டியில் இருந்து விலக திங்கள்கிழமைதான் கடைசி நாளாக இருந்தது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், புகா் மணிப்பூா் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 15 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்டமாகவும், மக்களவைத் தொகுதியின் 13 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தோ்தல் நடைபெறுகிறது.

புகா் மணிப்பூா் தொகுதியில் நான்கு வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இரண்டாம் கட்டமாக நடைபெறும் தோ்தலில், கேரளத்தின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி (காங்கிரஸ்), அன்னி ராஜா (எல்டிஎஃப்) மற்றும் கே. சுரேந்திரன் (பாஜக) ஆகியோா் முக்கிய வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா்.

இதேபோல, திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூா் (காங்கிரஸ்), ராஜீவ் சந்திரசேகா் (பா.ஜ.க.), பன்னியன் ரவீந்திரன் (எல்.டி.எப்.,) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

ராஜஸ்தானில் உள்ள கோட்டா தொகுதியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ஜோத்பூரில் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இதேபோல், பாஜக மாநிலத் தலைவா் சி.பி. ஜோஷி சித்தோா்கா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.