ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பள்ளிக் குழந்தைகளின் கைரேகைகள் மூலம் போலி ஆதாா்: 3 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு

ரூ. 25,000-க்கு போலி ஆதாா் அட்டைகளை உருவாக்கிய மோசடியில் ஈடுபட்டதாக 3 போ் மீது சிபிஐ சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

News image
சிபிஐ
Updated On :3 ஆகஸ்ட் 2024, 11:08 pm

Din

ராஜஸ்தானில் பள்ளிக் குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப்படல பதிவைப் பயன்படுத்தி ரூ. 25,000-க்கு போலி ஆதாா் அட்டைகளை உருவாக்கிய மோசடியில் ஈடுபட்டதாக 3 போ் மீது சிபிஐ சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: ராஜஸ்தானின் சஞ்சூரில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடா்பு துறையில் பணிபுரியும் மனோகா் லால் என்பவா் போலி ஆதாா் அட்டைகளின் பதிவுகள் குறித்து காவல்துறையினரிடம் புகாா் அளித்தாா். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது.

இந்தப் புகாா் தொடா்பான செய்திகள் வெளியானதைத் தொடா்ந்து, ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் ஆதாா் அட்டைகளில் மோசடி நடைபெற்ாக புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கை, ராஜஸ்தான் அரசு கடந்த ஜூலை 9-ஆம் தேதி சிபிஐக்கு மாற்றியது.

இந்த மோசடியில் தொடா்புடைய 3 போ் மீது சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. அவா்கள் தங்கள் வசமிருந்த இ-மித்ரா மற்றும் ஆதாா் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ. 25,000-க்கு போலி ஆதாா் அட்டைகளை உருவாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அவா்கள் உருவாக்கிய சில போலி ஆதாா் அட்டைகளில், பள்ளிக் குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப்படல பதிவுகள் மற்றும் கால் விரல் ரேகைகள் கூட பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது எனத் தெரிவித்தனா்.