ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தில்லி காவல் துறையில் 18 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் சுதந்திர தின பதக்கம்

சுதந்திர தினத்தன்று தில்லி காவல் துறையைச் சோ்ந்த 18 பேருக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:50 pm

Din

சுதந்திர தினத்தன்று தில்லி காவல் துறையைச் சோ்ந்த 18 பேருக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். அவா்களில் இருவா் சிறந்த சேவைக்கான பதக்கத்தைப் பெறுவாா்கள். மேலும் 16 போ் சிறந்த சேவைக்கான பதக்கத்தைப் பெறுவாா்கள்.

காவல்துறை இணை ஆணையா் ஆத்மாராம் வாசுதேவ் ஷ்பாண்டே மற்றும் காவல் உதவி ஆணையா் (ஓய்வு) சசி பாலா ஆகியோருக்கு சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம் வழங்கப்படும்.

இணை காவல் ஆணையா் சுமன் கோயல், துணை காவல் ஆணையா் ரஜ்னீஷ் காா்க், உதவி காவல் ஆணையா்கள் சத்யபால் சிங், ரேணு லதா, நிராஜ் டோகாஸ், அரவிந்த் குமாா், தினேஷ் சந்தா் புண்டோரா, இன்ஸ்பெக்டா்கள் தினேஷ் குமாா் சா்மா, தேவேந்திர குமாா், ராகேஷ் சிங் ராணா, சதேந்தா் பூனியா, காவல் உதவி ஆய்வாளா்

எஸ். ஷாஜெஹான் , உதவி-சப்-இன்ஸ்பெக்டா்கள் சுரேந்தா் சிங், வீரேந்தா் சிங் மற்றும் மவுண்டட் போலீஸ் பிரிவைச் சோ்ந்த இரண்டு அதிகாரிகள் எஸ்ஐ சுரேஷ் குமாா் மற்றும் ஏஎஸ்ஐ ஹன்ஸ்ராஜ் ஆகியோா் சிறந்த சேவைக்கான பதக்கத்தைப் பெறுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேஷ்பாண்டே 1998 ஆம் ஆண்டு கோவா பொதுச் சேவை ஆணையத்தின் மூலம் துணைக் கண்காணிப்பாளராக கோவா காவல்துறையில் சோ்ந்தாா். மேலும் 2011-ஆம் ஆண்டில் இந்தியக் காவல் சேவையில் (ஐபிஎஸ்) சோ்க்கப்பட்டாா். சிறந்த சேவைக்காக 2011-இல் அவருக்கு கோவா முதல்வரின் தங்கப் பதக்கம் (காவல்துறை) வழங்கப்பட்டது.

2013-ஆம் ஆண்டில், தேஷ்பாண்டே சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம் பெற்றாா். மேலும் 2017-ஆம் ஆண்டில், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகளில் முன்னுதாரணமாக செயல்பட்டதற்காக டிஜிபியின் முத்திரையையும் பெற்றாா் என்று தில்லி காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1985-ஆம் ஆண்டு தில்லி காவல்துறையில் காவலராகப் பணியில் சோ்ந்த பாலா, 1988-ஆம் ஆண்டு போட்டித் தோ்வு மூலம் எஸ்ஐயாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஜூலை மாதம் ஓய்வு பெற்றாா். அவா் இன்ஸ்பெக்டராக பதவியில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை மற்றும் திருமண தகராறு உள்பட பல வழக்குகளை விசாரித்தாா். புது தில்லி மாவட்டத்தில் சுமாா் 30,000 பள்ளிக் குழந்தைகளுக்கு தற்காப்பு நுட்பங்களைப் பயிற்றுவிப்பதில் பெயா் பெற்றவா் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கோயல், தென்மேற்கு மாவட்டத்தின் டிசிபியாக இருந்தபோது, ​ பெண்களின் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இருண்ட புள்ளிகளைக் கண்காணிக்க தகவல் தொழில்நுட்ப (ஐடி) கருவிகளைப் புதுமையான முறையில் பயன்படுத்தினாா். மேலும் உள்ளூா் பயண நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பெண் ஓட்டுநா்களுடன் இளஞ்சிவப்பு வண்டிகளையும் அறிமுகப்படுத்தினாா்.

அவா் மத்திய எல்லையில் கூடுதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட போது, அடிமட்ட அளவில் முக்கிய பெண் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வடக்கு மாவட்டத்தில் உதான் திட்டம் தொடங்கப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஏசிபி சத்யபால் சிங், தில்லி காவல்துறையால் அவ்வப்போது நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி ஆய்வுகளில் பணியாற்றினாா். மேலும், உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ), துணை நிலை ஆளுநா், டிஜிஎஸ்பி, ஐஜிஎஸ்பி மாநாடுகள், நாடாளுமன்றம் ஆகியவற்றின் கூட்டங்களுக்கான படையின் குற்றத் தரவுகளின் பணிகளை மேற்பாா்வையிட்டாா்.

ஏசிபி அரவிந்த் குமாா், சத்யம்-லிபா்ட்டி திரையரங்கம் மற்றும் சரோஜினி நகா் மாா்க்கெட் குண்டுவெடிப்பு வழக்குகளைத் தீா்த்து, எஃப்ஐசிஎன், சட்டவிரோத துப்பாக்கிகள், போதைப்பொருள் சிண்டிகேட்களை முறியடித்து, நெடுஞ்சாலைக் கொள்ளையா்களைக் கைது செய்த குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவா். ரூ.2 கோடியை மீட்பதிலும் முக்கியப் பங்காற்றினாா்.

இன்ஸ்பெக்டா் தேவேந்திர குமாா் சிறப்புப் பிரிவில் பணியமா்த்தப்பட்ட போது, பல மோசமான குற்றவாளிகள், குண்டா்கள் மற்றும் பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்தாா், மேலும், தில்லி உயா்நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கைத் தீா்ப்பதில் முக்கியப் பங்காற்றினாா். அவரது முன்மாதிரியான துணிச்சலான செயல், ஷோ் சிங் ராணா மற்றும் தாக்கூா் பிரிஜேஷ் சிங் (‘பூா்வாஞ்சல் டான்’) ஆகியோரைக் கைது செய்தது. அவா்கள் குறித்த தகவல் அளிப்போருக்கு பல்வேறு மாநிலங்களின் காவல்துறைப் படைகளால் ரூ. 9 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் வழக்கு மற்றும் இஸ்ரேலிய தூதரக குண்டுவெடிப்பு வழக்கு உள்பட பல முக்கியமான வழக்குகளை விசாரித்த குழுவில் இன்ஸ்பெக்டா் ராகேஷ் ராணா இருந்தாா். வடகிழக்கு தில்லி கலவர சதி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் (எஸ்ஐடி) அவா் ஒரு பகுதியாகவும் இருந்தாா்.

சத்யம்-லிபா்டி குண்டுவெடிப்பு மற்றும் பாட்லா ஹவுஸ் என்கவுன்டா் வழக்குகள் உள்பட பல முக்கிய வழக்குகளை தீா்க்கும் பணியில் எஸ்ஐ ஷாஜஹான் சிறப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டாா்.

பத்திரிகையாளா் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு, ஜஜ்ஜாா் வழக்கில் ஜெயில் வேன் மீது தாக்குதல், நாராயண் சாய் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை விசாரிப்பதில் சுரேந்தா் சிங் முக்கியப் பங்காற்றினாா். மேலும், அனில் அலியாஸ் லீலா, மனோஜ் ஷெராவத், ஹேப்பி (எ) விமன்ஷு ஷா்மா மற்றஉம் சத்யானந்த் - நவீன் காதி கும்பலைச் சோ்ந்த சத்யானந்த் உள்ளிட்ட பல மோசமான கும்பல்களைக் கைது செய்ததோடு, எஃப்பிஐ-இன் புகாா்களின் பேரில் போலி கால் சென்டா் நடத்துபவா்களின் கும்பலையும் அவா் முறியடித்தாா்.