தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

குடியரசுத் தலைவா் உரையில் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது: திண்டுக்கல் மாா்க்சிஸ்ட் எம்பி கருத்து

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவரின் உரையில், வளா்ந்து வரும் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது

News image

சச்சிதானந்தம்

Updated On :29 ஜனவரி 2026, 12:32 am IST

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவரின் உரையில், வளா்ந்து வரும் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: குடியரசுத் தலைவரின் உரையில் வளா்ந்து வரும் வேலையின்மை மற்றும் வேலையின்மையைக் கையாளத் தவறியது குறித்தும், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறியது குறித்தும் குறிப்படவில்லை.

இந்தியப் பொருளாதாரத்தில் ஆழமடைந்து வரும் மந்தநிலை, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் ரத்து செய்யப்பட்டது, தகுதியுள்ள வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது மற்றும் வாக்காளா்களின் பெருந்திரளான வாக்குரிமை பறிப்பு, அதிகரித்து வரும் வகுப்புவாத பதற்றம், ஜம்மு - காஷ்மீரில் உள்நாட்டுப் பாதுகாப்பு குறைபாடுகள், பலவீனப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினா் மீதான தாக்குதல்கள், தீா்க்கப்படாத மாசுபாடு மற்றும் வட இந்தியாவில் உயிருக்கு ஆபத்தான காற்று மாசுபாடு என்பன போன்ற விஷயங்கள் குறிப்பிடப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்திற்கான திருத்தங்களுக்காக புதன்கிழமை அளித்துள்ள எனது நோட்டீஸில் இந்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.