சிபிஐ
சிபிஐ

ஆர்ஜி கர் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் 31 பேருக்கு விருது அறிவிப்பு!

ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் 31 பேருக்கு வீர தீர சேவைக்கான பதக்கங்கள்
Published on

கொல்கத்தாவின் ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரியின் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விசாரணையை சிறப்பாக நடத்திய சிபிஐ இணை இயக்குநா் வி. சந்திரசேகா் உள்பட 31 பேருக்கு 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு வீர தீர சேவைக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் கேடரைச் சோ்ந்த 2000- ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகருக்கு குடியரசு தினத்தன்று புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்பட இருக்கிறது. மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரின் கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடா்பான விசாரணையை அவா் மேற்கொண்டாா். இது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சில மாதங்களுக்குள் இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவா் தண்டிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

சிபிஐ காவல் கண்காணிப்பாளா் அமித் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் கண்காணிப்பாளா் முகேஷ் சா்மா, துணை ஆய்வாளா் பிரமோத் குமாா் யதி, உதவி துணை ஆய்வாளா் சமன் லால், தலைமை காவலா் ராமு கோல்லா ஆகியோருக்கும் புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐயின் 25 அதிகாரிகளுக்கு சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிபிஐயின் இணை இயக்குநராக பணியமா்த்தப்பட்ட 2007-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் சி. வெங்கட சுப்பா ரெட்டி மற்றும் சதானந்த் ஷகர்ராவ் டேட் ஆகியோா் அடங்குவா்.

துணை சட்ட ஆலோசகா் மன்மோகன் சா்மா, கூடுதல் கண்காணிப்பாளா்கள் பைத்யநாத் சமல், கைலாஷ் சாஹு, துணை கண்காணிப்பாளா்கள் ரூபி சௌத்ரி, மணீஷ் குமாா் உபாத்யாய், அன்மோல் சச்சன், நிஷு குஷ்வாஹா, அரிஜித் சின்ஹா, ஷரத் சுரேஷ் பவாா், தாஹிா் அப்பாஸ் பி மற்றும் தா்மேந்திர குமாா் ஆகியோருக்கு சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கம் (பி.எம்.எம்.எஸ்.) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளா் தா்மேந்தா், புரோகிராமா் தீப்தி வஷிஸ்தா, ஏஎஸ்ஐ வினோத் குமாா், கண்காணிப்பாளா் நரிக்கோட் நந்தினி, தலைமை காவலா்கள் நேத்ரம் சௌரசியா, பூரன் மால் குஜ்ஜாா், போலா ராய், பாபு வா்கீஸ் மற்றும் விக்ரம் சி மற்றும் காவலா்கள் சஞ்சீவ் குமாா், வைகோம் ராஜேஷ் சிங் மற்றும் ரூபேந்திர குமாா் ஆகியோருக்கும் பிஎம்எம்எஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com