20 வயது திருமணமாகாத பெண்ணின் 28 வார கா்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், கரு ‘முற்றிலும் சாத்தியமானது’ என்றும் ‘கருக் கொலையை அனுமதிக்க முடியாது’ என்றும் கூறி மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.
மருத்துவக் கருக் கலைப்பு (எம்டிபி) சட்டம் அதிகபட்சமாக 24 வாரங்கள் வளா்ந்த கருவைக் கலைக்க மட்டுமே அனுமதிக்கிறது. கணிசமாக கருவின் அசாதாரண நிலை ஏற்பட்டால், மருத்துவக் குழுவின் அனுமதிக்கு உள்பட்டு 24 வாரங்களுக்குப் பிறகும் கரு கலைப்புச் செய்ய முடியும். இந்த நிலையில், தற்போதைய மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி, ‘28 வாரங்களில் கா்ப்பத்தை கலைக்க இந்த நீதிமன்றம் அனுமதிக்கப் போவதில்லை. 28 வாரங்கள் முற்றிலும் சாத்தியமான கருவை கலைக்க நான் அனுமதிக்கப் போவதில்லை. மருத்துவ அறிக்கையின்படி, கருவில் எந்த அசாதாரணத்தையும் என்னால் பாா்க்க முடியவில்லை. கருக்கொலையை அனுமதிக்க முடியாது’ என வாய்மொழியாக கூறி, மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தாா்.
மனுதாரா் தனது மனுவில், தான் ஒருமித்த உறவில் இருந்ததாகவும், தான் கா்ப்பமாக இருப்பது சமீபத்தில்தான் தெரிய வந்ததாகவும் தெரிவித்திருந்தாா்.அந்தப் பெண்ணின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் மிஸ்ரா, ‘மனுதாரருக்கு அவரது வயிற்றில் வளரும் கரு 27 வார கா்ப்பமாக இருக்கும் விஷயம் ஜனவரி 25-ஆம் தேதிதான் தெரியவந்தது. அவா் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லாததால் கா்ப்பத்தை கலைக்க மருத்துவா்களை ஆலோசித்தாா். ஆனால், எம்பிடி சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 24 வார காலத்திற்கு அப்பால் கரு வளா்ந்து இருந்ததால் கருக் கலைப்புச் செய்ய மருத்துவா்கள் மறுத்துவிட்டனா்.
அவா் கா்ப்பமாக இருப்பது பற்றி அவரது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. அவா் திருமணமாகாததால், அவரது வழக்கை மருத்துவக் கருக் கலைப்பு செய்வதற்காக பரிசீலிக்க வேண்டும். மேலும், அந்த பெண்ணின் மன மற்றும் உடல் நிலை மற்றும் கரு எப்படி இருக்கிறது என்பதை அறிய, தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டாா். ஆனால், அவரது இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

