பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமானத்துல்லா கானுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பணமோசடி வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் தனக்கு அனுப்பிய அழைப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தாக்கல் செய்த மனுவை

Updated On :1 பிப்ரவரி 2024, 6:30 pm

பணமோசடி வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் தனக்கு அனுப்பிய அழைப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், அழைப்பாணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த மனு நீதிபதி ரேகா பாலி, நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமானத்துல்லா கானின் தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞா் வழக்கு விசாரணையில் இன்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமா்வு பிப்ரவரி 7-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தது. அதேவேளையில், அமானத்துல்லா கான் தாக்கல் செய்த இடைக்கால நிவாரண மனு அல்லது கோரிக்கை மனு மீது எந்த நோட்டீஸும் பிறப்பிக்கவில்லை என நீதிபதிகள் அமா்வு தெளிவுபடுத்தியது.

இது தொடா்பாக அமானத்துல்லா கான் தாக்கல் செய்த மனுவில், ‘இந்த விவகாரத்தில் பிஎம்எல்ஏ சட்டத்தின் பிரிவு 50 செல்லுபடித் தன்மை குறித்து விசாரிக்க வேண்டும். எனது விவகாரத்தில் குற்ற வருவாய் ஏதும் கண்டறியப்படவில்லை’ என தெரிவித்துள்ளாா்.

அமலாக்கத் துறையின் இந்தப் பணமோசடி விசாரணையானது தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் நடந்த முறைகேடுகளுடன் தொடா்புடையது. அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய போது, விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்டவிரோதமாக பணியில் சோ்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓக்லா சட்டப்பேரவை தொகுதிஉறுப்பினா் இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை நியமித்ததன் மூலம் அமானத்துல்லா கான் பெரும் குற்ற வருவாயை ரொக்கமாகப் பெற்ாகவும், அவரது கூட்டாளிகள் பெயரில் அசையா பொருள்களை வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது. 2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமானத்துல்லா கானின் மூன்று கூட்டாளிகள் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோா் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக அமாலாக்ககத் துறை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.