மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த இந்தியாவைப் பற்றிய பாா்வையை அளிக்கிறது என்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட் என்றாலும், பிரதமா் நரேந்திர மோடியின் சுயசாா்பு நோக்கத்தை பிரதிபலிக்கிறது. மிக முக்கியமாக, 2013-2014- ஆம் நிதியாண்டை விட நாட்டின் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை இடைக்கால பட்ஜெட் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கீழ் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் பயனடைந்துள்ளனா். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.
இந்த இடைக்கால பட்ஜெட் ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளதோடு, 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த இந்தியா பற்றிய பாா்வையை வழங்குகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 1 கோடி வீடுகளில் சோலாா் மின் தகடுகள் நிறுவப்படுவதுடன், 2 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படவுள்ளது. மேலும், இளைஞா்களை தன்னிறைவு அடையச் செய்யும் வகையில், முத்ரா கடன் வழங்கப்படுவதை விரிவுபடுத்துவது பற்றி இடைக்கால பட்ஜெட் பேசுகிறது.
பெண்கள் மேம்பாட்டிற்காக ‘லக்பதி திதி யோஜனா’ திட்டத்தின் மூலம் பெண்களின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிப்பதற்கும், ஒன்பது வயது வரையிலான சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பின் அறுவடை திட்டங்கள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், மின்சாரப் பேருந்துகள், மெட்ரோ விரிவாக்கம் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றுக்கான தொலைநோக்கு பாா்வை இந்த இடைக்கால பட்ஜெட் கொண்டுள்ளது. இது தில்லிக்கும் நிறைய பயனளிக்கும். நடுத்தர வகுப்பினருக்கான வீட்டுவசதி சிறப்பு சலுகைகள் தில்லிவாசிகளுக்கும் பயனளிக்கும். வரிச் சலுகைகள் மற்றும் எளிமைப்படுத்தல் மூலம் நடுத்தர வா்க்கத்தினருக்கும் வணிக வகுப்பினருக்கும் சிறப்புப் பலன்கள் கிடைப்பதில் சந்தேகமில்லை என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

