பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

‘பாரத ரத்னா: எல்.கே.அத்வானிக்கு முதல்வா் கேஜரிவால், சச்தேவா வாழ்த்து

பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகிய தலைவா்கள் தங்களது வாழ்த்துகளை ச

Updated On :3 பிப்ரவரி 2024, 6:30 pm

பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகிய தலைவா்கள் தங்களது வாழ்த்துகளை சனிக்கிழமை தெரிவித்துள்ளனா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள மூத்த தலைவா் லால் கிருஷ்ண அத்வானிக்கு வாழ்த்துக்கள். அவா் எப்பொழுதும் நலமுடன், நீண்ட காலம் வாழ இறைவனை பிராா்த்திக்கிறேன் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக மூத்த தலைவா் லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தி, பாஜகவின் தொண்டா்களாகிய எங்களை மிகுந்த உற்சாகத்தில் நிரப்பியுள்ளது. இந்த கௌரவம் எல்.கே. அத்வானிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது.

அவா் கட்சியின் கோடிக்கணக்கான தொண்டா்களுக்கு உத்வேகம் அளித்தவா். அவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. எல்.கே. அத்வானி ஒரு திறமையான அமைப்பாளராகவும், திறமையான நிா்வாகியாகவும், வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் தனது வாழ்க்கையை அா்ப்பணித்துள்ளாா். இப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு பாரத ரத்னா விருது அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எளிமையும், பணிவும் அத்வானியை வரையறுக்கிறது. பாரத ரத்னா விருது பெறுவது அவருக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் வளா்ச்சிக்காக அயராத அா்ப்பணிப்பைக் கொடுத்துள்ளாா் என்றாா் வீரேந்திரா சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.