கலால் ஊழல் வழக்கின் முறையே ஜாமீன் மற்றும் காவலில் பரோல் வழங்கக் கோரி ஆம் ஆத்மி மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த இரண்டு மனுக்களுக்கு சிபிஐ தரப்பில் வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனுக்களுக்கு மத்திய புலனாய்வு துறையானது தனது பதில் மனுக்களை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. அதில், சிசோடியாவின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டது.
இது தொடா்பாக நீதிபதி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனு மற்றும் காவலில் பரோல் கோரிய மற்ற மனுக்களுக்கு சிபிஐ சாா்பில் இன்று பொதுவான பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது... கூட்டாகக் கோரிய மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, குற்றம் சாட்டப்பட்டவரின் மேற்கண்ட மனுக்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வாதங்களுக்கு பட்டியலிடப்படுகிறது’ என்றாா்.
இதற்கிடையில், இது தொடா்பான பணமோசடி வழக்கில் சிசோடியா தாக்கல் செய்த இதே போன்ற மனுக்களில் தங்கள் பதில்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு நீதிபதி பிப்ரவரி 5 வரை அவகாசம் அளித்தாா்.
இதுகுறித்து நீதிபதி கூறுகையில், ‘வழக்கமான ஜாமீன் மனு மற்றும் மனிஷ் சிசோடியா தாக்கல் செய்த காவலில் பரோல் கோரிய மற்ற மனுக்களுக்கு பதில்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறை சாா்பில் மேலும் சிறிது அவகாசம் கோரப்பட்டுள்ளது. மற்றும் கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இந்த விவகாரம் தற்போது பதில் மற்றும் வாதங்களுக்காக பிப்ரவரி 5-ஆம் தேதி பட்டியலிடப்பட உத்தரவிடப்படுகிறது. மேலும், பதில்களைத் தாக்கல் செய்ய எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது’ என்றாா்.
தில்லி கலால் வரிக் கொள்கை ஆகஸ்ட் 2022-இல் ரத்து செய்யப்பட்டது. மேலும், அரசு அதிகாரிகள், உயரதிகாரிகள் மற்றும் மதுபான வியாபாரிகள் உள்பட பலா் சம்பந்தப்பட்ட இக்கொள்கை உருவாக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்க துணைநிலை ஆளுநா் சிபிஐயிடம் கேட்டுக் கொண்டாா். சிபிஐ எப்ஐஆரின் அடிப்படையின் பேரில், ஊழல் மூலம் கிடைத்த பண மோசடி குறித்து விசாரணை நடத்த அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

