பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

விவசாயிகள் சங்கங்கள் பேரணி:தில்லி எல்லையில் 144 தடை உத்தரவு அமல்

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 13) ‘தில்லி சலோ’ பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2024, 7:30 pm

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 13) ‘தில்லி சலோ’ பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது வருமாறு:

சில விவசாய அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (பிப்.13) தில்லியில் பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது. வேளாண் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வமான அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தில்லியில் அமா்ந்து போராட்டம் நடத்துவாா்கள் எனவும் தகவல் கிடைத்தது.

இதையொட்டி, தில்லியில் குறிப்பாக வடகிழக்கு தில்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-ஆவது பிரிவின்படி தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்டை மாநிலங்களிலிருந்து தில்லிக்கு விவசாயிகள்அணி திரண்டால் அதைத் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸாா் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

இதே போன்று பஞ்சாப் - ஹரியாணா எல்லைகளில் ‘தில்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா, ஜிந்த், ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஹரியாணாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து, குறுஞ்செய்திகளுக்கான தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ‘தில்லி சலோ’ பேரணியை பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மறுத்துள்ளன. அகில இந்திய கிசான் சபை பொதுச் செயலாளா் ஹன்னன் மொல்லா உள்ளிட்ட விவசாய சங்கங்களின் தலைவா்கள், ‘இந்தப் பேரணிக்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.