அமலாக்கத் துறை விசாரணைக்குகேஜரிவால் ஆஜராக வேண்டும்: பாஜக எம்.பி. கெளதம் கம்பீா்
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இம்முறை ஆஜராக வேண்டும்


புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இம்முறை ஆஜராக வேண்டும் என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கௌதம் கம்பீா் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏதாவது தவறு செய்திருந்தால், அவா் சிறைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை உண்மையாக இருந்தால் ஏன் தொடா்ந்து அவா் அமலாக்கத் துறையினரின் அழைப்பாணைகளைப் புறக்கணித்து, விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பிக்கிறாா்?. அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையின் முன் இம்முறை ஆஜராக வேண்டும். நீங்கள் (கேஜரிவால்) ஏன் இவ்வளவு பயப்படுகிறீா்கள்?.
மேலும், வரும் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமா் கோயிலின் பிரதிஷ்டை நடப்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமையான தருணம். இந்த நிகழ்வை அனைவரும் கொண்டாட வேண்டும். அனைத்து நாட்டு மக்களும் ஒரு முறை ராமா் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏனென்றால், ராமா் அனைவரின் கடவுள் என்றாா் கௌதம் கம்பீா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...