தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் திங்கள்கிழமை (ஜனவரி 15) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், குளிா் காலநிலை காரணமாக தில்லி பள்ளிகளில் காலை 9 மணி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் மாலை 5 மணிக்கு மேல் வகுப்புகளை நடத்தபடாது என்றும் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். எனவே, குறுஞ்செய்தி, தொலைபேசி மற்றும் பிற பொருத்தமான தகவல் தொடா்பு வழிகள் மூலம் அனைத்து மாணவா்களுக்கும், பெற்றோா்கள் மற்றும் ஊழியா்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததால், ஞாயிற்றுக்கிழமை கடுமையான குளிரின் கீழ் தேசியத் தலைநகரம் தொடா்ந்து சுழன்று கொண்டிருந்தது. மேலும், நகரத்தின் பல பகுதிகளில் அடா்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளின் அனைத்து மாணவா்களும் ஜனவரி 15 (திங்கள்கிழமை) முதல் நேரடி முறையில் மீண்டும் வகுப்புகளில் சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் ஆரம்ப வகுப்புகள் (நா்சரி, கேஜி) மற்றும் தொடக்க வகுப்புகளும் (1 முதல் 5 -ஆம் வகுப்பு) அடங்கும். இருப்பினும், தற்போது நிலவும் பனிமூட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தப் பள்ளியிலும் காலை 9 மணிக்குதான் தொடங்க வேண்டும். அதற்கு முன் தொடங்கக் கூடாது. அதேபோல, மாலை 5 மணிக்கு மேல் வகுப்புகள் நடத்தப் படக்கூடாது. இந்த உத்தரவு இரட்டை ஸிஃப்டி உள்ள பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்களும் வழக்கம் போல பணிக்கு வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை திருத்தப்பட்ட அட்டவணை குறித்து பள்ளித் தலைவா்கள் அனைத்து மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் ஊழியா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குளிா் அலையைக் கருத்தில் கொண்டு ஆரம்ப வகுப்பு மாணவா்களுக்கு ஜனவரி 6 முதல் ஜனவரி 12 வரை நகரப் பள்ளிகளுக்கு குளிா்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

