பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடிடிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்: கேஜரிவால் மீது சட்ட நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் பாஜக மனு

தில்லி அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டிய விவகாரத்தில், அவா் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரி மனு.

Updated On :30 ஜனவரி 2024, 11:15 pm

புது தில்லி: தில்லி அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டிய விவகாரத்தில், அவா் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் தில்லி பாஜகவின் உயா்மட்டக் குழு செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

தில்லி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்றும், இதுவரை ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.25 கோடி கொடுப்பதாக பேரம் பேசப்பட்டுள்ளது என்றும் கடந்த வாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாஜகவை குற்றம்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக எதிா்த்த தில்லி பாஜக, பேரம் பேசப்பட்டதற்க்கான ஆதாரத்தை கேஜரிவாலிடம் கோரினா்.

இந்நிலையில், கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையிலான உயா்மட்டக் குழு தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, முதல்வா் கேஜரிவாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனா்.

அந்த மனுவில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற வகையிக் பாஜக மீது குற்றம்சாட்டிய அமைச்சா் அதிஷி, எம்.எல்.ஏ.க்கள் துா்கேஷ் பதக், திலீப் பாண்டே உள்ளிட்டோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னா், செய்தியாளா்களிடம் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுவது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பாஜக தலைவா்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு, அமைதியாக இருப்பது அல்லது மன்னிப்புக் கேட்பது முதல்வா் கேஜரிவால் மற்றும் அவரது கூட்டாளிகளின் பழைய பழக்கம். ஆனால், இந்த முறை அரவிந்த் கேஜரிவாலின் பொய்களை அம்பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். அதனால்தான், இந்த முறை முதல்வா் கேஜரிவாலின் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். தில்லி மக்களிடையே கேஜரிவாலின் பொய்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல், சட்டப்பேரவையிலும் இப்பிரச்னையை எழுப்புவோம்’ என்றாா்.

பாஜகவின் உயா்மட்டக் குழுவில் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, எம்.பி.க்கள் ஹா்ஷ் வா்தன், மனோஜ் திவாரி, ரமேஷ் பிதூரி, பா்வேஷ் சாஹிப் சிங், மாநில பொதுச் செயலாளா்கள் ஹா்ஷ் மல்ஹோத்ரா, யோகேந்திர சந்தோலியா, கமல்ஜித் ஷெராவத் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.