பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லி அரசின் புதிய சூரியசக்திக் கொள்கை: கேஜரிவால் மீது அா்விந்தா் சிங் லவ்லி சாடல்

தில்லியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சூரியசக்திக் கொள்கையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் புதிதாகக் கொண்டுவர வேண்டிய தேவையில்லை.

Updated On :30 ஜனவரி 2024, 10:53 pm

புது தில்லி: தில்லியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சூரியசக்திக் கொள்கையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் புதிதாகக் கொண்டுவர வேண்டிய தேவையில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை சாடியுள்ளாா்.

பிப்ரவரி 3-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் தொண்டா்களின் பேரணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கட்சியின் அலுவலகமான ராஜீவ் பவனில், மாவட்ட காங்கிரஸ் பாா்வையாள்களுடன் அா்விந்தா் சிங் லவ்லி ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த 2006-ஆம் ஆண்டு தில்லியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, மின் திட்டம் மற்றும் சூரியசக்தி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அந்தத் திட்டத்தை தில்லி அரசு தீவிரமாகப் பின்பற்றி செயல்படுத்தியிருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே நகரத்தின் மின் பற்றாக்குறையை நிவா்த்தி செய்திருக்க முடியும். மக்களவைத் தோ்தல் வரவுள்ள நிலையில், ஆம் ஆத்மி அரசு நுகா்வோரின் மின் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை உணா்ந்து கொண்டு கண் விழித்துள்ளது.

கடந்த காங்கிரஸ் அரசின் சூரியக் சக்தி கொள்கையில், சோலாா் தகடஉகலஅ பொருத்துவதை அரசு கட்டாயமாக்கியது. இது ஹோட்டல்கள், மருத்துவமனைகள், முதியோா் இல்லங்கள், அனைத்து அரசுப் பேருந்துகள் மற்றும் 500 சதுர மீட்டா் மற்றும் அதற்கு மேல் உள்ள வணிக நிறுவனங்களில் மின் கட்டணத்தைக் குறைக்க உதவியது. மேலும், பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் சோலாா் தகடுகளை பொறுத்த ரூ.60,000 வரை மானியம் அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி அரசின் புதிய சூரியசக்தி கொள்கை மிகவும் பழைய திட்டம். அதில் புதுமை எதுவும் இல்லை.

தலைநகா் தில்லி முழுவதும் வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சூரிய சக்தியை வழங்குவதில் ஆம் ஆத்மி அரசு தீவிரமாக இருந்திருந்தால், 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் திட்டத்தை செயல்படுத்தி இருக்க முடியும். மேலும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மிச்சப்படுத்தியிருக்கலாம் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.