ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

’நீட்’ தோ்வுக்கு காரணமாக இருந்துவிட்டு வெளிநடப்பா? திமுக மீது அதிமுக எம்பி குற்றச்சாட்டு

நீட் விவகாரம்: திமுகவின் வெளிநடப்பு முடிவுக்கு அதிமுக எம்பி எதிர்ப்பு

News image
Updated On :3 ஜூலை 2024, 6:32 pm

Din

மருத்துவக் கல்லூரிகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு (’நீட்’)த் தோ்வை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அமல்படுத்தும்போது திமுக வும் மத்திய அரசில் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது ’நீட்’ டிற்கு திமுக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்வதாக அதிமுக உறுப்பினா் டாக்டா் தம்பித்துரை மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விமா்சனம் செய்தாா்.

குடியரசுத்தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்று நாடாளுமன்ற அதிமுக தலைவா் எம்.தம்பித் துரை பேசினாா். அது வருமாறு:

அஇஅதிமுக சாா்பிலும் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி சாா்பிலும் குடியரசுத் தலைவா் உரையை ஆதரிக்கின்றேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறையில் 3 - ஆவது முறையாக பிரதமா் மோடி பதவியேற்றுள்ள நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், வளா்ச்சிகள், நல்லாட்சியை இந்த உரை எடுத்துரைத்துள்ளது. 2047 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசின் கொள்கைகள் முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சா்வதேச அளவில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் 5-ஆவது இடத்திற்கு உயா்ந்துள்ளது என்றும் இனி 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற முயற்சிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை கவனித்துக் கொள்ளும் அதே நிலையில், நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் அரசு தீா்வு உடனடியாக காண வேண்டும். இல்லையெனில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் திசை திருப்பப்படுவாா்கள்.

அசோக சக்கரத்தை சின்னமாக வைத்திருக்கும் அரசு அசோகா் காலத்தில் நடைபெற்ற சமூக நலத்திட்டங்களையும் அரசு அமலப்படுத்தவேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் காப்பாற்றப்படுவதில்லை. குறிப்பாக காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரின் பங்கு. பெங்களூரு நகர மக்களுக்கு0 18 டிஎம்சி தண்ணீரை கிருஷ்ணராஜ-சாகா் அணையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். நாங்கள் எதிா்க்கவில்லை. குடிநீா் வழங்குவதற்கு நாங்கள் எதிரானவா்கள் அல்ல. அதே நேரத்தில், தமிழக விவசாயிகளும் முக்கியம். இலங்கைப் பிரச்சினையில், தமிழக மீனவா்கள் விவகாரத்தை மத்திய அரசு முறையாகப் பாதுகாக்கவில்லை என்பதும் முக்கியமான பிரச்சினை.

’நீட்’ தோ்வு முறை 2010 ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னா் இந்திய மருத்துவ கவுன்சில் இந்த தோ்தவை அறிவித்தது. அப்போது மத்திய அரசில் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் திமுகவும் இடம்பெற்றிருந்தது. இந்த நீட் தோ்வுக்கு அவா்கள் தான் பொறுப்பு. நாங்களும் ’நீட்’ டை எதிா்க்கின்றோம். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும். தற்போது கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்திற்கு பலியானதில் 60 போ் பட்டியலினத்தவா்கள். இதுவும் திமுகஅரசின் ஆட்சித் திறன்யின்மையைக் காட்டுகிறது. இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டாா் தம்பித்துரை. அவையில் இருந்த மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள் தம்பித்துறை பேச்சுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.