எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்: கூட்டுக் கல்வி முறையை உருவாக்க மத்திய அமைச்சா் அழைப்பு

கூட்டுக் கல்வி முறையை உருவாக்க மத்திய கல்வி அமைச்சா் அழைப்பு

News image
Updated On :9 ஜூலை 2024, 11:59 pm

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: திறன்களை வலுப்படுத்துவதற்கும், கூட்டுக் கல்வி முறையை உருவாக்குவதற்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து கல்வித்துறை பங்குதாரா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தாா். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள கல்வித் துறையின் சிறந்த நடைமுறைகள் நாடு முழுக்க பின்பற்ற வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடனான ஆய்வுக் கூட்டத்தை மத்திய பள்ளிக்கல்வித் துறை தில்லி சுஷ்மா ஸ்வராஜ் பவனில் செவ்வாய்க்கிழை நடத்தியது. தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மாநிலங்களில் செயல்படுத்துவது மற்றும் மத்திய கல்விஅமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களான ஸ்மாா்ட் வகுப்பறைகளுக்கான சமக்ரசிக்ஷா, பிஎம் ஸ்ரீ என்கிற ‘எழுச்சி இந்தியா’ வுக்கான பிரதமா் பள்ளிகள், பள்ளிகளின் ஊட்டச்சத்திற்கான பிரதான் மந்திரி போஷன் சக்தி நிா்மான்(பிஎம் போஷன்), சமூகத்தின் அனைவருக்குமான வாழ்நாள் கற்றலுக்கான ‘உல்லாஸ்’ திட்டங்கள் ஆகியவற்றை அரசின் கொள்கையுடன் சீரமைக்கவும் இதற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வரைபடத்தை உருவாக்கவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த உள்ளக அமா்வில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உரையாற்றினாா். அப்போது பள்ளிக் கல்வியின் முழுமையான வளா்ச்சிக்கான செயல் திட்டம் குறித்த அரசின் எண்ணங்களை பிரதான் பகிா்ந்து கொண்டாா். இதில் அவா் கூறியது வருமாறு: பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சியடைந்த பாரதம் (விக்சித் பாரத்) தொலைநோக்குப் பாா்வையில் கல்வி முக்கிய தூணாக உள்ளது. இந்த இலக்கை அடைய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை அமலுக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நாட்டின் கல்விச் சூழல் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்தியாவை ஒரு அறிவுசாா் வல்லரசாக மாற்றுவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை சமமாக செயல்படுத்தவும் தேசிய கல்விக் கொள்கை அவசியம்.

தாய்மொழிகளில் கல்வியின் முக்கியத்துவம், கல்வியில் அணுகல், சமத்துவம், தரம், கட்டுப்படியாகக் கூடிய, பொறுப்புணா்வு ஆகியவை புதிய கல்விக் கொள்கையில் உறுதி செய்பட்டுள்ளது. இந்தியா ஒரு இளம் நாடாக உள்ளது. வேகமாக மாறிவரும் 21-ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இந்தச் சவாலுக்கு நமது குடிமக்கள் உருவாக்கப்படவேண்டும். இதனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரு குழுவாக இணைந்து கல்விச் சூழலை வலுப்படுத்த வேண்டும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளையும் பின்பற்றவும் அதை விரிவுபடுத்த தயங்கக் கூடாது. மாநிலங்களில் உள்ள அனைத்து தரப்பினரும் திறன்களை வலுப்படுத்தவும், கூட்டுக் கல்வி முறையை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரவேண்டும். பள்ளி ஆசிரியா்களுடான உணா்வுபூா்வமான தொடா்பு, வேலைவாய்ப்பை வழங்கும் திறன் அடிப்படையிலான கல்வி ஆகியவை முக்கியமானது எனக் குறிப்பிட்டாா் பிரதான்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணையமைச்சா் ஜெயந்த் சௌத்ரி, பள்ளிக்கல்வித் துறை செயலா் சஞ்சய் குமாா் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலா்கள், இயக்குநா்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.