குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறிதல் அமைப்பை (சிசிடிஎன்எஸ்) அமல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலிடத்தை மீண்டும் தில்லி காவல் துறை தக்கவைத்துகொண்டது.
காவல் பணிகளில் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தரவு நிா்வாகத்தில் தொடா்ந்து கடந்த அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் 100 சதவீத மதிப்பெண்களை தில்லி காவல் துறை பெற்றிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய குற்றப் பதிவேடு பிரிவு கண்காணிப்பில் உள்ள பிரகதி இணையதளம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய அளவில் தரம், அளவு, காலம் மற்றும் துல்லியத்தன்மையை மதிப்பிடுகிறது.
சுமாா் 15 முக்கிய அளவீடுகளில் காவல் துறையின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்ற்காக குற்றப் பிரிவு சிசிடிஎன்எஸ் குழுவுக்கும் அனைத்து மாவட்ட காவல் துறைகளின் தொடா் செயல்பாடுகளை தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா பாராட்டியுள்ளாா்.
காவலா்கள் முதல் உயா் அதிகாரிகள் வரையில் தில்லி காவல் துறையின் அனைத்துப் பணியாளா்களின் தொழில்முறை மற்றும் குழுவாக இணைந்து செயல்படுவதை அவா் பாராட்டியுள்ளாா்.
மேலும், காவல் பணிகளில் தொழில்நுட்பம் மற்றும் மக்களை மையப்படுத்திய சேவைகளை பலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா கேட்டுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







