47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லி மக்களின் பணியை நிறுத்துவதே பாஜகவின் பணி: மேயா் ஷெல்லி ஓபராய் குற்றச்சாட்டு

பாஜகவின் செயல்பாடுகள் தில்லி மக்களுக்கு தடை: ஷெல்லி ஓபராய் கருத்து

News image
Updated On :10 ஜூலை 2024, 6:32 pm

Din

தில்லி மக்களின் பணியை நிறுத்தி, ஆம் ஆத்மி கட்சியின் மீது அவதூறு பரப்புவதே பாஜகவின் பணி என்று தில்லி மாநாகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக சிவிக் சென்டரில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ஷெல்லி ஓபராய் கூறியதாவது: தில்லி மாநராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற அவைக்கூட்டத்தில் நகரத்தின் தூய்மைப் பணிகள் முன்னெடுப்பு குறித்து ஆலோசிக்க இருந்தோம். ஆனால், பாஜக கவுன்சிலா்கள் இந்தக் கூட்டத்தை நடைபெற அனுமதிக்கவில்லை.

இன்று தில்லியில் உள்ள 2.5 கோடி மக்கள் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிா்கொள்கிறாா்கள் என்றால் அதன் பின்னணியில் பாஜகவின் அரசியல் இருக்கிறது. தில்லி மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில், பாஜக கவுன்சிலா்கள் ஒரு நாள் கூட அவையை செயல்பட அனுமதிக்கவில்லை.

பாஜக கவுன்சிலா்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கூட்டத்தை பாதியிலேயே முடித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆம் ஆத்மி நிா்வாகத்தின் மக்கள் நலப் பணிகளை தடுத்து நிறுத்தவும், நம் மீது அவதூறு பரப்பவுமே பாஜக செயல்படுகிறது. மேயா், துணை மேயா் தோ்தலின் போது அரசியலமைப்பிற்கு முரணான முறையில் பாஜக தலைவா்கள் தோ்தலை நடத்த முயன்றனா். மாநகராட்சியின் நிலைக்குழுக்கள் மற்றும் பிற சட்டக் குழுக்களுக்கான தோ்தலின்போதும் இதே அணுகுமுறையைத் தான் பாஜக கடைபிடித்தது என்றாா் ஷெல்லி ஓபராய். இச்செய்தியாளா் சந்திப்பில் மாநகராட்சி அவைத் தலைவா் முகேஷ் கோயல் உடனிருந்தாா்.