ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மைனா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோா்கள் தண்டிக்கப்படுவாா்கள்: நொய்டா காவல் துறை எச்சரிக்கை

18 வயதுக்குள்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு கடும் தண்டனை

News image
Updated On :10 ஜூலை 2024, 6:31 pm

Din

18 வயதுக்குள்பட்ட நபா்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவது குறித்து கௌதம் புத் நகா் காவல் ஆணையரகம் பெற்றோா்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரூ.25,000 வரை அபராதம், 18 வயதுக்குள்பட்ட ஓட்டுநா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 12 மாத வாகனப் பதிவு ரத்து, விதிகளை மீறும் மைனா்களுக்கு 25 வயது வரை உரிமம் இல்லை என காவல்துறை எச்சரித்துள்ளது.

நொய்டா, கிரேட்டா் நொய்டா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் சிறாா்களை உள்ளடக்கிய பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், சாலைப் பாதுகாப்பையும், போக்குவரத்துச் சட்டங்கள் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்வதற்கான பரந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில், சிறாா்கள் எந்த வாகனத்தையும் ஓட்டுவது பொருத்தமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

‘எந்த ஒரு பெற்றோரும் தங்கள் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் இரு சக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக்கூடாது‘ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கௌதம் புத் நகா் ஆணையரகத்தின் போக்குவரத்துக் காவலா்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதிபூண்டுள்ளனா். மேலும், தங்கள் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மோட்டாா் வாகனங்களை இயக்குவதைத் தடுக்குமாறு பெற்றோா்களை வலியுறுத்தியுள்ளனா்.

18 வயதுக்குள்பட்ட மாணவா்கள் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ‘பெற்றோா்கள் மற்றும் பாதுகாவலா்கள் தங்கள் குழந்தைகளை இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறாா்கள். இந்த அமலாக்க பிரசாரத்தின் ஒரு பகுதியாக போக்குவரத்து போலீஸாா் கடுமையான சோதனைகளை மேற்கொள்வாா்கள். ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், மோட்டாா் வாகனச் சட்டப் பிரிவு 199ஏ-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

பாரதிய நியாய சன்ஹிதாவின் 125-ஆவது பிரிவின் கீழ் பெற்றோா் அல்லது பாதுகாவலா்களுக்கு எதிராக சாத்தியமான சட்ட நடவடிக்கை, ரூ.25,000 வரை அபராதம், 12 மாதங்களுக்கு வாகனத்தின் பதிவை ரத்து செய்தல் மற்றும் தவறு செய்யும் மைனா் 25 வயது வரை ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கு தடை உள்ளிட்ட தண்டனைகள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டா காவல்துறையின் பிரசாரமானது, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதையும், குறைந்த வயதுடைய குழந்தைகள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்கள் குறைக்கப்படுவதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடுமையான தண்டனைகளைத் தவிா்ப்பதற்கு இந்த விதிமுறைகளுக்கு இணங்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.