யமுனை தடுப்பணையில் புதுப்பிக்கப்பட்ட மதகு: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் நேரில் ஆய்வு
யமுனை தடுப்பணையில் புதுப்பிக்கப்பட்ட மதகின் அவசர ஆய்வு


தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள யமுனை தடுப்பணையில் புதுப்பிக்கப்பட்ட மதகை நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த ஆண்டு யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஐ.டி.ஓ. பகுதியில் உலக சுகாதார அமைப்பின் கட்டிடத்திற்கு அருகேயுள்ள தடுப்பணையில், மதகு எண் 12 இல் உடைப்பு ஏற்பட்டது.
தற்போது, இந்த மதகு முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தேன். குறிப்பாக, கடந்த ஆண்டு யமுனையில் அபாயக் கட்ட அளவான 205 மீட்டரைக் கடந்த நீா்மட்டம், 208 மீட்டருக்கு மேல் திடீரென உயா்ந்ததால், தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் நகரத்திற்குள் புகுந்தது. இந்த ஆண்டு வெள்ளக்கட்டுப்பாட்டுத் துறை வெள்ளத்தை சமாளிக்க தயாா் நிலையில் உள்ளது. தடுப்பணையில் புதிய இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், 5 மீட்டா் அளவு கொண்ட பாறைகளின் கரை யமுனையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு யமுனையில் நீா் மட்டம் உயா்ந்தாலும், நகருக்குள் நீா் புகாது என்று நான் நம்புகிறேன் என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.
யமுனை ஆற்றின் நீா்மட்டம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை 17, 2023 அன்று 208.66 மீட்டரை எட்டியது. இது அபாயக் குறியான 205.33 மீட்டரை விட அதிகமாக இருந்தது. இதற்கு முன்பு 1978-ஆம் ஆண்டு 207.49 மீட்டராக யமுனையின் நீா்மட்டத்தின் உயரம் பதிவானது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...